Last Updated : 13 Jan, 2019 07:59 AM

 

Published : 13 Jan 2019 07:59 AM
Last Updated : 13 Jan 2019 07:59 AM

மக்களவை தேர்தலில் உ.பி.யில் காங்கிரஸுக்கு இடமில்லை; மாயாவதி-அகிலேஷ் கூட்டணி அறிவிப்பு: தலா 38 தொகுதிகளில் போட்டியிட முடிவு

உ.பி.யில் நேற்று அறிவிக்கப்பட்ட சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட் டணியில் காங்கிரஸுக்கு இடமளிக் கப்படவில்லை. இதன் பின்னணி யில் பிரதமராக மாயாவதியும், அம் மாநில முதல்வராக அகிலேஷ்சிங் யாதவும் அமர்வது திட்டமாக உள்ளது.

உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் அகிலே ஷின் சமாஜ்வாதி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகியோர் தலா 38-ல் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மீதம் உள்ள நான்கில் இரண்டு அஜீத் சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம் (ஆர்எல்டி) கட்சிக்கும், காங்கிரஸ் தலைவர்களின் ராய்பரேலி மற்றும் அமேதியில் வேட்பாளர்களை நிறுத் தப்போவதில்லை எனவும் முடி வாகி உள்ளது. இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பை மாயாவதியும், அகிலேஷும் நேற்று லக்னோவில் அறிவித்தனர்.

இது குறித்து மாயாவதி கூறும் போது, ‘உ.பி.யின் அனைத்துத் தொகுதிகளையும் வெல்வதன் மூலம் பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்க முடியும். எங்கள் ஒற்றுமை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவின் தூக்கத்தை கெடுக்கும்’ என்றார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற உ.பி. முதல்வர் மற்றும் துணை முதல்வர் தொகுதிகளின் இடைத் தேர்தலில் மாயாவதி, அகிலேஷ் கட்சிகள் இணைந்ததால் பாஜக தோற்றது. இதில், காங்கிரஸ் டெபாசிட்டை இழந்தது. இதன் காரணமாக 2 கட்சிகளும் கூட்டணி வைத்திருப்பதாக அறிவிக்கப்பட் டுள்ளது. இவர்களின் கட்சிகளுக்கு காங்கிரஸின் வாக்குகள் கிடைப் பதில்லை என்பதால் கூட்டணியில் இடமளிக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

கடந்த 2014 மக்களவை தேர் தலில் மாயாவதி பிரதமர் பதவியை குறி வைத்து தனித்து போட்டியிட் டார். அவருக்கு உ.பி.யின் ஒரு தொகுதியும் கிடைக்கவில்லை. இருந்தபோதும் தற்போது மீண்டும் பிரதமர் பதவியை குறிவைத்து மாயாவதி இறங்கியுள்ளார்.

எனவே அடுத்த பேரவை தேர்தலில் உ.பி. முதல்வராகும் வாய்ப்பை அகிலேஷ் யாதவுக்கு தருவது என இருவரும் ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப் படுகிறது.

இது குறித்து அகிலேஷ் பேசும் போது, ‘பாஜகவின் கர்வத்தை அடக்க எங்கள் கூட்டணி அவசிய மாகிறது. இந்த கூட்டணி எதிர்காலத் திலும் தொடரும். பிரதமர் பத விக்கு நான் மாயாவதியை முன் மொழிகிறேன்’ என்றார்.

இந்த 2 கட்சிகளும், 25 வருடங் களுக்கு பிறகு மத்தியிலும், உ.பி.யிலும் பாஜக ஆட்சியை தடுக்க இணைந்துள்ளனர்.

ரவிசங்கர் பிரசாத் பேட்டி

இது குறித்து மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறும்போது, ‘இக்கட்சிகள் தேசத் துக்காகவோ, உ.பி. நலனுக்கா கவோ சேரவில்லை. மாறாக அர சியலில் தாம் நிலைத்திருக்கவே கூட்டணியாகப் போட்டியிடுகின் றனர்’ எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x