Published : 09 Sep 2014 11:01 AM
Last Updated : 09 Sep 2014 11:01 AM

ரஷ்யாவால் போரைச் சமாளிக்க முடியாது!

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ராணுவத்துக்காக அதிகமாகச் செலவழிக்கும் நாடுகளில் ரஷ்யாவுக்கு 8-வது இடம். 'ராணுவத்துக்கான செலவை அதிகரிப்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்பது கட்டுக்கதை. அதே சமயம் குறிப்பிட்ட, பிரத்யேகச் சூழல்களில் அது பலனளிக்கவும் செய்யும். எனினும் அப்படியான சூழ்நிலை தற்போது ரஷ்யாவில் இல்லை' என்கிறது 'எக்ஸ்பெர்ட்' என்ற இணைய இதழ்.

ராணுவத்துக்காக அதிகமாகச் செலவிடுவது என்பது, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருக்கும் தருணங்களில், உற்பத்திக் குறைவான காலங்களில் பலனளிக்கலாம். 1930-களில் அமெரிக்காவில் நிலவிய மிகப் பெரும் பொருளாதார வீழ்ச்சியை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

அப்படியான சூழல் தற்போது ரஷ்யாவில் இல்லை. இங்கு வேலையில்லாத் திண்டாட்டம் குறைவு. தொழிற்சாலைகளும் போதுமான உற்பத்தியைத் தருகின்றன. மேலும், போர்க் காலத்தில் ரஷ்யா கண்டுபிடித்த புதிய தொழில் நுட்பங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படுவதும் இல்லை. அமெரிக்காவில் அப்படி இல்லை. பென்டகன் நிதி உதவியுடன் உருவாக்கப்பட்ட கணினியும் இணையமும் இன்று அன்றாட வாழ்வில் பயன்படுகின்றன.

இதுபோன்ற விஷயங்களில் அமெரிக்கா பெரும் நிதியைச் செலவிடுகிறது. அந்த நாட்டு மக்கள் இந்தச் செலவுகள் குறித்துச் சந்தேகம் எழுப்புவதைத் தவிர்க்கும் வகையில் அவற்றுக்கான நியாயத்தையும் அமெரிக்கா கொண்டிருக்கிறது.

தி மாஸ்கோ டைம்ஸ் - தலையங்கம்



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x