Last Updated : 19 Aug, 2014 10:00 AM

 

Published : 19 Aug 2014 10:00 AM
Last Updated : 19 Aug 2014 10:00 AM

இன்று 175வது ஆண்டு புகைப்பட தினம்

புகைப்படக்கலையின் பெருமையை அனைவரும் உணர்ந்து கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19-ம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. அதிலும், இன்று 175-வது ஆண்டு புகைப்பட தினமாகும். புகைப்பட கருவியை உருவாக்கு வதற்கான முயற்சி 13-வது நூற்றாண்டிலேயே தீவிரமடைந்து விட்டது. அப்போது கேமரா அப்ஸ்குரா என்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, சிறியதும், பெரியதுமாக பல்வேறு கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. மிகப்பெரிய முன்னேற்றம் 1825-ம் ஆண்டு ஏற்பட்டது. பிரான்ஸை சேர்ந்த ஜோசப் நீப்ஸ் என்பவர் ஒரு கட்டிடத்தின் புகைப்படத்தை தனது கருவியில் படம் எடுத்தார். ஆனால், அந்த பிம்பம் 8 மணி நேரத்திற்கு பிறகு அழிந்துவிட்டது.

1839-ம் ஆண்டு சர் ஜான் ஹெர்செல் என்பவர் கண்ணாடியை பயன்படுத்தி நெகட்டிவ்களை எடுக்கும் முறையை கண்டுபிடித் தார். அவர்தான், இக்கலைக்கு போட்டோகிராபி என்று பெயர் வைத்தார். இது கிரேக்க மொழியி லிருந்து வந்த சொல்லாகும். அதன் அர்த்தம் ஒளியின் எழுத்து என்பதாகும். அதே ஆண்டு, லூயிஸ் டாகுரே என்பவர், சில்வர் காப்பர் பிளேட்டில் பிம்பங்கள் விழும் வகையிலான புகைப்படம் எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினார்.

மரத்தாலான இந்த புகைப்படக் கருவியில் லென்ஸ் பொருத்தப்பட்டிருந்தது. இதற்கு டாகுரியோடைப் என்று பெயரிடப்பட்டு மிகவும் பிரபலமாக விளங்கியது. இந்த முறைக்கு பிரான்ஸ் அகாடமி ஆஃப் சயின்ஸ் ஒப்புதல் அளித்தது. இதன் செயல் பாடுகளை 1839-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதி ‘ப்ரீ டூ தி வேர்ல்ட்’ என உலகம் முழுவதும் அறிவித்தது. அந்த நாளையே ஆண்டுதோறும் உலக புகைப்பட தினமாக கொண் டாடுகிறோம்.

1841-ல் பிரிட்டனை சேர்ந்த வில்லியம் ஹென்ரி பாக்ஸ் என்பவர் கலோடைப் என்ற முறையை அறிமுகப்படுத்தினார். இதில் நெகட்டிவ்களாக பேப்பர் கள் பயன்படுத்தப்பட்டன. அதிலிருந்து பாசிட்டிவ் இமேஜ் உருவாக்கப்பட்டது. 1851-ல் பிரெடிரிக் ஸ்காட் என்பவர் சில்வர் நைட்ரேட் பயன் படுத்தப்பட்ட வெட் கோலோடியன் செயல் முறையை கண்டறிந்தார். 1880-களில் செல்லுலாய்ட் பிலிம்களை பயன்படுத்தி புகைப் படம் எடுக்கும் கருவியை ஜான் கார்பட், ஹன்னிபால் குட்வின், ஈஸ்ட்மேன் கோடாக் ஆகியோர் தயாரித்தனர் இந்த முறையில் செல்லுலாஸ் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டது.

1888-ம் ஆண்டு ஜார்ஜ் ஈஸ்ட்மேன் முதல் முறையாக பேப்பர் பிலிம்களை பயன்படுத்தி பாக்ஸ் கேமராவில் புகைப்படம் எடுக்கும் முறையை கண்டறிந்தார். அதைத்தொடர்ந்து 1900-ல் பாக்ஸ் பிரவுனி என்ற வகை கேமராக்களை கோடாக் அறிமுகப்படுத்தினார். 35 மி.மி. ஸ்டில் கேமராக்களை 1913-ல் ஆஸ்கர் பர்னாக் வடிவ மைத்தார். இது புகைப்படத் துறை யையே புரட்டிப்போட்டது.

முதல் டிஜிட்டல் கேமராவை சோனி நிறுவனம் 1981-ம் ஆண்டு தயாரித்தது. அதன் பின்பு, தற்போது வரை டிஜிட்டல் கேமராக்களில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x