Published : 09 Jul 2014 10:00 AM
Last Updated : 09 Jul 2014 10:00 AM

மலைக்கிராம மக்களுக்கு விலையில்லா விறகு வழங்கும் திட்டம்- கொடைக்கானலில் முதல்முறையாக அறிமுகம்

கொடைக்கானல் வனவிலங்குகள் சரணாலயத்தைச் சுற்றியுள்ள மலைக்கிராம மக்கள் உணவு சமைப்பதற்காக விரைவில் விலையில்லாமல் விறகு வழங்கும் திட்டம் தொடங்கப்படுகிறது. இந்தத் திட்டம் தமிழகத்தின் மற்ற சரணாலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தொடங் கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கொடைக்கானல் வனப்பகுதி தமிழகத்தின் 12-வது வனவிலங்குகள் சரணாலயமாக செயல்படுகிறது. இந்த சரணாலயத்தில் மொத்தம் 61 ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதிகள் உள்ளன. இவற்றில் 18 ஆயிரம் ஹெக்டேரில், வேட்டில், பைன் மற்றும் தைலமரங்கள் உள்ளன. இந்த மரங்கள், பசுமையான கொடைக்கானல் சோலைக் காடு களுக்கும், நீர் ஆதாரத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய தால், இந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த 3 மாதங் களுக்கு முன் உத்தரவிட்டது. இதையடுத்து, சோலைக் காடுகள் மறுஉற்பத்தி திட்டத்தின்கீழ், தமிழ்நாடு வனத்துறை மூலம் இந்த வேட்டில், பைன் மற்றும் தைலமரங்களை வெட்டி அப்புறப் படுத்தும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது.

தொடர்ந்து நடைபெறும் பணி

முதல்கட்டமாக தற்போது கொடைக்கானல் பேரீட்சம் பகுதி, மதிகெட்டான் சோலை, குண்டன்சோலை, பூக்கால் சோலை, கவுஞ்சி சோலை மற்றும் ஜமீன்தார் சோலை ஆகிய இடங்களில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் வேட்டில், பைன் மற்றும் தைலமரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து இந்த மரங்களை வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மரங்களை வெட்டும் பணி 10 ஆண்டுகள்வரை நீடிக்கும் வாய்ப்புள்ளது. இந்த மரங்களை, சரணாலயத்தைச் சுற்றியுள்ள மலைக்கிராம மக்களுக்கு உணவு சமைப்பதற்கு விறகுகளுக்காக விலையில்லாமல் வழங்க தமிழ்நாடு வனத்துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மலைக்கிராம மக்கள் உணவு

சமைக்க காடுகளில் கிடைக்கும் விறகுகளை நம்பியே உள்ளனர். கொடைக்கானல் சரணாலயத் துக்குள் தினசரி 200 முதல் 300 மலைக்கிராமத்தினர் நுழைந்து விறகுகளுக்காக மரங்களை வெட்டி எடுத்துச் செல்கின்றனர். அப்போது மற்ற மரங்களையும் வெட்டி கடத்திச் சென்று விடுகின்றனர். வனஊழியர்கள் பற்றாக்குறையால் அவர்களைக் கட்டுப்படுத்த முடிய வில்லை. சரணாலய வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், சரணால யத்தில் கிடைக்கும் வீணாகக்கூடிய, பயன்படாத பொருள்களை, சுற்றி யுள்ள மலைக்கிராம மக்களுக்கு விலையில்லாமல் வழங்கலாம் என கூறப்பட்டுள்ளது.

வனத்துறை அட்டைகள்

இந்தத் திட்டத்தின்கீழ், கொடைக்கானல் சரணாலயத்தில் தற்போது வெட்டப்படும் வேட்டில், பைன் மற்றும் தைலமரங்களை மலைக் கிராம மக்களுக்கு விலையில்லா விறகு வழங்கும் திட்டத்தில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த மலைக்கிராம மக்கள் குடும்பத் தினரைக் கணக்கெடுத்து, அவர் களுக்கு ரேஷன் கார்டு போல் வனத்துறை அட்டை ஒன்று வழங்கப்படுகிறது. இந்த அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே விலையில்லா விறகு வழங்கப்படும். இதன் மூலம், மலைக்கிராம மக்கள், வனத்துறை இடையே நல்லுறவு வலுப்படும்.

வனப்பகுதிகளில் சமூகவிரோத செயல்கள் நடந்தால், அவை குறித்து வனத்துறையினருக்கு அவர்கள் தகவல் அளிக்க வாய்ப் புள்ளது. இந்தத் திட்டம் சிறப்பாக செயல்படும்பட்சத்தில் மற்ற சரணாலயங்களிலும் செயல்படுத்த தமிழ்நாடு வனத்துறை முடிவு செய்துள்ளது என்றார்.

ஏற்கெனவே, விலையில்லாமல் அரிசி வழங்கும் தமிழக அரசு, தற்போது விறகையும் விலையில் லாமல் வழங்க முடிவு செய்துள் ளதால், மலைக்கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x