Published : 28 Oct 2015 10:37 AM
Last Updated : 28 Oct 2015 10:37 AM

பயந்தவர்கள் கேலி செய்கிறார்கள்

மோடி பிரதமராகப் பதவியேற்றதும் ‘காங்கிரஸ் ஆட்சியில் பிரதமர் பொம்மை; பாஜக ஆட்சியில் பிரதமரைத் தவிர அனைவரும் பொம்மை' என்றனர். அந்த அளவுக்கு அனைத்து அதிகாரங்களையும் பிரதமர் தன் கையில் வைத்திருந்தார். அமைச்சர்களும் தங்கள் சொந்தக் கருத்துகளை வெளிப்படையாகப் பேசவே பயப்பட்டனர். ஆனால், இன்று அமைச்சர்களின் பொறுப்பற்ற வில்லங்கப் பேச்சை கண்டித்துப் பேசக்கூட பிரதமர் பயப்படுகிறாரோ எனும் அளவுக்குப் பிரதமர் மவுனமாக உள்ளார்.

இந்தியாவில் பிரதமர் மோடியைப் பேசவிடாமல் செய்யும் சக்தியிடமிருந்து விடுபடவே வெளிநாட்டுப் பயணம் போய், அங்குள்ள இந்தியர்களிடம் மனம்விட்டுப் பேசுகிறார் என ‘மோடியின் வியக்க வைக்கும் பலவீனம்!' கட்டுரையில் ராமச்சந்திர குஹா குறிப்பிடுவது அதிகமாகத் தெரிந்தாலும், அதில் உண்மை நிறைந்திருப்பதை யாரும் மறுத்துவிட முடியாது. யாரும் எதிர்த்துக் கேள்வி கேட்டுவிடக் கூடாது என்பதற்காகவே வானொலி மற்றும் வெளிநாட்டில் அதிகம் பேசும் பிரதமர், ஊடகங்களிடம் நேரடியாகப் பேசத் தயங்குகிறாரோ என்ற சந்தேகம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. இவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்போது மோடியின் பலவீனம் வியக்கவைக்கும் அளவுக்கான பலவீனமே.

- ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x