தகுதியுள்ள வாக்காளர்கள் விடுபடக் கூடாது!

தகுதியுள்ள வாக்காளர்கள் விடுபடக் கூடாது!
Updated on: 
2 min read

நாட்டின் 14 மாநிலங்கள், 3 மத்திய ஆட்சிப் பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கத் திருத்தம் (எஸ்எஸ்ஆர்) நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

வழக்கமான நடவடிக்கைதான் என்றாலும், வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தத்தில் (எஸ்ஐஆர்) வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் நிலையில், எஸ்எஸ்ஆர் அறிவிப்பு விவாதத்துக்கு வழிவகுத்திருக்கிறது.

2025ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற பிஹாரில் தேர்தலுக்கு முன்பாக எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்றன. பிறகு இந்த ஆண்டு தேர்தலை எதிர்கொண்ட தமிழகம், கேரளம், அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் / மத்திய ஆட்சிப் பகுதிகளிலும் எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இங்கெல்லாம் எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், வழக்கமாக ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும் நடைபெறும் வாக்காளர் சுருக்கத் திருத்தப் பணிகள் 2025 இறுதியில் நடைபெறவில்லை. தற்போது 2027 ஜனவரி 1ஆம் தேதியை அடிப்படையாக வைத்து 14 மாநிலங்கள், 3 மத்திய ஆட்சிப் பகுதிகளில் எஸ்எஸ்ஆர் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொதுவாக, எஸ்எஸ்ஆர் என்பது புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதன் மூலமும், பட்டியலில் இல்லாதவர்கள் / மரணமடைந்தவர்களை நீக்குவதன் மூலமும் வாக்காளர் பட்டியலைப் புதுப்பிப்பதை நோக்கமாகக் கொண்டது.

Loading content, please wait...

X