தாமதமாகும் வீடு ஒதுக்கீடு: உரிமையை உறுதிசெய்த தீர்ப்பு

தாமதமாகும் வீடு ஒதுக்கீடு: உரிமையை உறுதிசெய்த தீர்ப்பு
Updated on
2 min read

ஒப்பந்ததாரரால் தாமதமாக ஒப்படைக்கப்பட்ட வீட்டில் நுகர்வோர் குடியேறிவிட்டாலும், தாமதத்துக்கான இழப்பீட்டை அவர் கோர முடியும் என உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு நம்பிக்கை அளிக்கிறது.

டெல்லியைச் சேர்ந்த பத்மநாபன் என்பவர் அபியான் கூட்டுறவுக் குழு வீட்டுவசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டத்தின்கீழ் வீடு வாங்க 2003இல் ஒப்பந்தம் செய்தார்.

அவருக்குத் தாமதமாக வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் அந்த வீட்டில் குடியேறி ஒன்றரை ஆண்டு ஆன நிலையில், தாமதத்துக்காக நிர்வாகம் இழப்பீடு அளிக்க வேண்டும் என மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஒப்பந்ததாரர் கேட்டுக்கொண்டபடி மத்தியஸ்தம் (arbitration) செய்துகொள்ளுமாறு மாவட்ட அளவிலான ஆணையம் தீர்ப்பு அளித்தது. மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையமும் இதை உறுதிப்படுத்தியது.

பத்மநாபன் அடுத்ததாகத் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார். அங்கு அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ‘வீட்டில் குடியேறிவிட்ட ஒருவர் ‘நுகர்வோர்’ அந்தஸ்தை இழந்துவிடுகிறார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in