காதலாகிக் கசிந்து... உயிருக்கு நேர் 9

காதலாகிக் கசிந்து... உயிருக்கு நேர் 9
Updated on
2 min read

கார்த்திக் நேத்தாவின் ‘காமத்திருவாழி’ என்ற கவிதைகளின் தொகுப்பை 2026 சென்னைப் புத்தகக் காட்சியில் கண்டேன். காமத்தை ‘எரிமலையின் அறிதுயில்/முறுவெயில் நின்றெரிய/நீராலும் தீரா விடாய்’, ‘பாசம் சூல்கொள்ளும்/கூட்டில் இடும் பரமுட்டை’, ‘நண்டு உண்ட நுரைக்கவளம்’, ‘இளமையில் முயக்கம் இல்லாதவர்க்கு/அறிதொறும் அறியா வியப்புகள் இல்லை/முதுமையில் அசைபோட முயங்கிசை இல்லை’ என்றெல்லாம் சிறப்பித்திருக்கிறார்.

முகப்புரையாகத் தலைப்புவிளக்கக் குறிப்பு ஒன்றும் எழுதியிருக்கிறார்: ‘காமத்திருவாழி என்பது காமப் பெருங்கடல், காமப் பெருஞ்சக்கரம், வாழிய திருக்காமம், திருக்காமம் வாழும் உயிர் என்றெல்லாம் பொருள்படும். காதல் என்று தற்காலத்தில் புழங்கும் சொல் பழந்தமிழில் இல்லை. காமமே காதல். இன்று மோகம் என்ற பொருளில் காமம் குறுகிவிட்டது. அன்றைய களவு இன்றைய விதிமீறல் அல்ல.’

காமம் அன்றைக்குக் காதல்தான்; உள்ளங்கள் கூடுகிற ‘உள்ளப் புணர்ச்சி’ என்றும் உடம்புகள் கூடுகிற ‘மெய்யுறு புணர்ச்சி’ என்றும் அதை வகைப்படுத்தியிருந்தார்கள். இன்றோ காமம் வெறும் ‘மெய்யுறு புணர்ச்சி’யாக, மோகமாகக் குறுகிவிட்டது உண்மைதான். களவும் இன்று பிறர்பொருள் கவர்தல் என்றே பொருள்கொள்ளப்படுகிறது. ஆனால் இலக்கியத்தில், களவு பிறர்பொருள் கவர்தல் இல்லை.

ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் தங்களது நெஞ்சக் கலப்பினைப் பிறர் அறியாதபடி மறைத்து ஒழுகியதால், அது களவு. ‘தனது சேகரத்தை அனைவர்க்குமாக வெளிப்படுத்தாமல் மறைத்து வைத்துக்கொண்டதால் வேதம் மறை எனப்பட்டதுபோல, காதல் மறைத்து வைத்துக்கொள்ளப்பட்டதால் களவு எனப்பட்டது’ என்று நச்சினார்க்கினியரைச் சான்றுவைத்துச் சொல்கிறார் வெள்ளைவாரணர். ஆகவே, காமமும் களவும் பொருள்மாற்றம் பெற்றுவிட்டன என்பது சரிதான்.

ஆனால் காதல் என்று தற்காலத்தில் புழங்கும் சொல் பழந்தமிழில் இல்லை என்று படித்தபோது, காதலைத் தேடும் காமம் மிகுந்துவிட்டது. ‘காதல் கைம்மிகக் கனவின் அரற்றலும்’ என்று தொல்காப்பியத்திலேயே காதல் வந்துவிடுகிறது (தொல்.பொருள்.கள.24). காதல் கைமீறினால் தூக்கம் கெடும்; தப்பித்தவறித் தூங்கிவிட்டாலோ ‘மாலை என் வேதனை கூட்டுதடீஇ, காதல் தன் வேலையைக் காட்டுதடீஇ’ என்று கனவில் புலம்பவைத்துவிடும். ‘காதல் கைம்மிகல்’ என்பதற்கு உரையெழுதும் பேராசிரியர், காதலையும் காமத்தையும் நிகராகவே கொண்டு, அப்போது நிகழ்வது இது என்று ஔவையின் பாட்டைச் சான்று காட்டுகிறார்:

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in