என் பெயர் பேதைச் சோழன் | உயிருக்கு நேர் 13

என் பெயர் பேதைச் சோழன் | உயிருக்கு நேர் 13
Updated on
2 min read

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டத்தில் பொசுக்குடி என்று ஓர் ஊர். அதற்கு என்ன? அதன் பழைய பெயர் பிசிர்க்குடி. அதற்கு என்ன? சங்ககாலத்தில், கெழுதகை நட்பின் இலக்கணம் அந்த ஊரில்தான் எழுதப்பட்டது.

நிற்க. ‘எனது கெழுதகை நண்பர்...’ என்று அரசியல் மேடைகளில் பேசுவதைக் கேட்டிருக்கிறோம். ‘கெழு தகைமை’ என்றால் என்ன? திருக்குறளின் ‘பழைமை’ என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கெழுதகைமையை வரையறுக்கிறார்.

நட்பை விளக்கும் அதிகாரத்துக்குப் பழைமை என்று பெயர் வைக்கக் காரணம் என்ன? ஏனென்றால் ஆராயாமல் சேர்த்துக்கொண்ட புதுக்கூட்டாளியைவிட, ஆராய்ந்து தக்கவைத்துக்கொண்ட பழைய கூட்டாளிகளுக்கே கெழுதகைமை உண்டு.

கெழுதகைமைக்கு வருவோம்: ‘நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை; மற்றுஅதற்கு உப்புஆதல் சான்றோர் கடன்’ (குறள் 802). நட்பை உருவமாகக் கொண்டால், கெழுதகைமை அதன் உறுப்பு.

கெழுதகைமை என்றால் உரிமை. நண்பர் உரிமையோடு ஒன்றைச் செய்தால், ‘என்னைக் கேட்டா செய்தாய்? எனக்கென்ன?’ என்று தலைதிருப்பிக் கொள்ளாது, கேளாமலே செய்த அச்செயலுக்கு உப்புப்போட்டுச் சுவைசேர்க்குமாறு நடந்துகொள்வதுதான் நண்பர்களின் கடமை. கெழுமுதல் என்றால் பொருந்துதல்; நிறைதல். நட்பு என்பது ஒருவரோடு ஒருவர் பொருந்துதல் மட்டுமா? ஒருவரில் ஒருவர் நிறைவதும்தான்.

இருக்கட்டும். பிசிர்க்குடிக்கு வருவோம். பிசிர்க்குடியில் தோன்றிய அந்தக் கெழுதகை நண்பரின் பெயர் ஆந்தையார். பிசிர்க்குடியினர் என்பதால் பிசிராந்தையார். கோப்பெருஞ்சோழனின் நட்புக்கு உப்பாக இருந்து சுவைசேர்த்த பெருமகன்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in