பின்தங்கலாமா தமிழ்நாட்டின் ஆரோக்கியம்?

குடும்ப நலக் குறியீடுகளில் மாவட்டங்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்திருக்கிறது
பின்தங்கலாமா தமிழ்நாட்டின் ஆரோக்கியம்?
Updated on: 
3 min read

இந்தியாவில் குடும்ப நலக் குறியீடுகளில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு தொடர்ந்து திகழ்ந்துவருகிறது. தேசியக் குடும்ப நல ஆய்வு முடிவுகளின் கடந்த மூன்று சுற்றுக்களின் (NFHS-4 (2015-16), NFHS-5 (2019-21), NFHS-6 (2023-24) முடிவுகளின்படி கல்வி, தாய்மை நலம், ஊட்டச்சத்து போன்ற பல துறைகளில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவுசெய்துள்ளது.

இருப்பினும், அண்மையில் வெளிவந்துள்ள மாவட்ட அளவிலான புள்ளிவிவரங்கள், தமிழ்நாட்டின் முன்னேற்றம் சமமாக நிகழவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றன.

சில மாவட்டங்கள் வேகமாக முன்னேறியிருக்கும் நிலையில், சில மாவட்டங்கள் பின்னடைவு, தேக்கம் அல்லது வளர்ச்சி சார்ந்த மந்தநிலையை எதிர்கொண்டுள்ளன. இதனால் மாவட்டங்களுக்கு இடையேயான வளர்ச்சி இடைவெளி விரிவடைந்து வருகிறது.

பெண் கல்வி

ஆறு வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகளில் பள்ளிக்குச் சென்றுள்ள விகிதம் 2015-16இல் 72.2 சதவீதமாக இருந்தது; 2019-21இல் 80.4 சதவீதமாக உயர்ந்து, 2023-24இல் அதே நிலையில் உள்ளது. ஆனால், மாவட்டங்களுக்கு இடையேயான வேறுபாடு தொடர்கிறது.

2023-24இல் கன்னியாகுமரி 94.2 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளபோது, ஈரோடு 69.8 சதவீதத்துடன் கடைசியில் உள்ளது. இதன் இடைவெளி 24.4 சதவீதப் புள்ளிகள். அரியலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சிவகங்கை, தேனி ஆகியவை தொடர்ந்து மாநில சராசரிக்குக் கீழே உள்ளன.

மேலும், 2019-21 முதல் 2023-24க்குள் கோயம்புத்தூர், சிவகங்கை, தேனி, மதுரை மாவட்டங்களில் இந்த விகிதம் குறைந்திருப்பது கவலைக்குரியது. அதேபோன்று, 15 முதல் 49 வரை வயது உள்ள பெண்களில், 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் கல்வி பெற்றவர்களின் விகிதம் மாநில அளவில் 50.9 சதவீதத்திலிருந்து 64.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஆனால், கன்னியாகுமரி (79.4%), விருதுநகர் (53.8%) இடையேயான வேறுபாடு 26 சதவீதப் புள்ளிகளாக உள்ளது. இது கல்வியை அணுகுவதில் மாவட்டங்களுக்கு இடையே தொடர்ந்து நிலவும் சமமற்ற வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in