எதிர்கால இந்தியாவின் உளவியல் சவால்

உளவியல் அடிப்படையிலான சமூகத் திட்டமிடல் இன்றைய தேவை
எதிர்கால இந்தியாவின் உளவியல் சவால்
Updated on
3 min read

அண்மையில் வெளியான மாதிரிப் பதிவு முறை (SRS) புள்ளியியல் அறிக்கை (Sample Registration System (SRS) Statistical Report 2024) புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவின் மொத்தக் கருத்தரிப்பு விகிதம், அதாவது ஒரு பெண் தன் வாழ்நாளில் பெற்றுக் கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை அளவு தற்போது 1.9 ஆகக் குறைந்துள்ளது.

இது மக்கள்தொகையை நிலைத்திருக்கச் செய்யத் தேவையான 2.1 என்கிற மாற்று நிலையைவிடக் குறைவு. 2014இல் 21ஆக இருந்த பிறப்பு விகிதம் 2024இல் 18.3ஆகக் குறைந்திருக்கிறது. அதே நேரம், இறப்பு விகிதம் 6.7இலிருந்து 6.4ஆக மட்டுமே குறைந்துள்ளது.

இந்தியாவின் சராசரியான நடுத்தர வயது தற்போது 29.2. சீனாவின் சராசரி நடுத்தர வயது 40.2. பல ஐரோப்பிய நாடுகளில் இது இன்னும் அதிகம். அதே நேரத்தில் இந்தியாவில் தற்போது 15 முதல் 29 வயதுக்குள் உள்ள இளைஞர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 38 கோடி.

இது நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 27% ஆகும். 35 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் இந்தியாவின் மக்கள்தொகையில் 65%க்கும் மேல் உள்ளனர். இந்தப் புள்ளிவிவரத்தில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இந்திய மக்கள்தொகையில் இளைஞர்கள், முதியோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது.

இதை ஒரு தனித்துவமான காலக்கட்டமாக வல்லுநர்கள் கருதுகிறார்கள். இந்த மாற்றம் வெறும் பொருளாதார மாற்றமோ அல்லது புள்ளிவிவர மாற்றமோ அல்ல, ஆழமான உளவியல் / சமூக மாற்றம். தற்போதைய சமூக - அரசியல் சூழலில் குழந்தைகள், இளைஞர்கள், முதியோர்களின் மனநிலையை எப்படிப் பாதுகாக்கப்போகிறோம் என்பதே இந்தியாவின் மிகப் பெரிய சவால்.

மாறிவரும் மனித உறவுகள்

கருத்தரிப்பு விகிதம் குறைவதற்கு நகரமயமாக்கல், கல்வி வளர்ச்சி, குடும்பக் கட்டுப்பாட்டு விழிப்புணர்வு, சிறிய குடும்பங்களை விரும்பும் மனநிலை போன்றவை காரணமாகின்றன. இவை அனைத்தும் வளர்ச்சியின் அறிகுறிகள் என்றாலும், குடும்பங்களின் மரபான அமைப்பையே இவை மாற்றிவருகின்றன.

ஒரு காலத்தில் இந்தியக் குடும்பங்கள், தலைமுறை சார்ந்த உறவுகளின் மேல் கட்டப்பட்டிருந்தன. தாத்தா, பாட்டி, உறவினர்கள், பராமரிக்கும் பொறுப்பைப் பகிர்ந்துகொள்வது - இப்படியான சூழலில் குழந்தைகள் வளர்ந்தனர். முதியவர்கள் குடும்பத்தின் மையமாக இருந்தனர்.

குடும்பம் என்பது வெறும் பொருளாதார அமைப்பாக அல்லாமல், அதீத உணர்வுகளை மேலாண்மை செய்யும் அமைப்பாக இருந்தது. இன்று, சமூக ஊடகங்கள் உருவாக்கும் செயற்கை அடையாள உலகம் உண்மையான மனித உறவுகளை மெதுவாக மாற்றிவருகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in