ஜென் ஸீ தலைமுறையின் அரசியலும் கருத்தியலும்

சக உயிர்களின் இருத்தலோடு தொடர்புடைய அனைத்து அம்சங்களிலும் தாக்கம் செலுத்துகின்றனர்
ஜென் ஸீ தலைமுறையின் அரசியலும் கருத்தியலும்
Updated on
3 min read

சமகாலச் சர்வதேச அரசியலில் ஜென் ஸீகளின் (Gen Z) வரவு நிகழ்த்தும் மாற்றங்கள் குறித்த உரையாடல்கள் தொடங்கி 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், தமிழ்நாட்டு அரசியலிலும் ஜென் ஸீகள் பேசுபொருளாக மாறியிருக்கிறார்கள். அவர்களை மையமாக வைத்து அரசியல் வியூகங்கள் வகுக்கப்படுவதைப் பார்க்கிறோம்.

அதேவேளையில், ஜென் ஸீகள் அரசியலில் மட்டும் அல்லாமல், சக உயிர்களின் இருத்தலோடு தொடர்புடைய அனைத்து அம்சங்களிலும் ஆழமான தாக்கத்தைச் செலுத்திவருவதையும் நாம் கவனிக்க வேண்டும்.

அதனால் அவர்களின் இயங்குதளம் அனைத்தையும் இணைத்து அவதானிப்பதே அவர்களுடைய அரசியலை விளங்கிக்கொள்வதாக அமையும். மாறும் அரசியல், பண்பாட்டுக் களத்துக்கேற்பத் தகவமையவும் வழிகாட்டும்.

ஜென் ஸீகள் யார்?

‘ஜென் ஸீ’ என்பதற்கான வரையறை 30 ஆண்டுகளுக்கு முன்பே உருவாகிவிட்டது. கனடா எழுத்தாளரும் கலைஞருமான டக்ளஸ் கூப்லண்ட் 1991இல் வெளியிட்ட ‘எக்ஸ் தலைமுறை: துரிதமடைந்த பண்பாட்டுக்கான கதைகள்’ (Generation X: Tales for an Accelerated Culture) என்கிற நூலுக்குப் பிறகு, மேற்கத்திய சமூக ஆய்வுகளில் தலைமுறைகளை ‘எக்ஸ்’, ‘ஒய்’, ‘இசட்’ என வகைப்படுத்துவது பரவலானது.

அதன் தொடர்ச்சியாக 1990களின் இறுதியில் தொடங்கி 2010களின் தொடக்கம் வரையிலும் பிறந்தவர்கள் ‘ஜென் ஸீ’ எனக் குறிக்கப்பட்டார்கள். இன்றைய தேதியில் 14 முதல் 29 வயதுடையவர்கள் ஜென் ஸீகள்.

நாடு, கல்வி, பொருளாதார அடிப்படையில் ஜென் ஸீகளுக்கு உள்ளேயே வேறுபாடுகள் இருந்தாலும் வெவ்வேறு வயதுடையவர்களின் தொகுப்பாக இருக்கும் அவர்களைச் சமகாலத்தின் டிஜிட்டல் அரசியலிலும் பண்பாட்டு மாற்றத்திலும் பங்கு வகிப்போர், இளம் தொழில்முனைவோர், முதன்முதலில் வாக்களிப்போர், மாணவர்கள் என்று வகைப்படுத்திக்கொள்ளலாம். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அரசியல், பண்பாட்டுக் களத்தில் வலது, இடது, பழமைவாதம், தேசியவாதம் எனத் தனித்தனி இலக்குகள் இருந்தாலும், எதிலிருந்து விடுபட வேண்டும் என்பதில் ஒருங்கிணைவு இருக்கிறது.

இதற்குச் சான்றாக, இந்தியாவின் ஜென் ஸீ வாக்காளர்களைச் சொல்லலாம். 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வாக்காளர் பட்டியலின்படி தேசிய அளவில் 22.8 கோடியாக இருந்த ஜென் ஸீகளும், தமிழ்நாட்டில் 2026இல் வெளியான வாக்காளர் பட்டியலின்படி 1.18 கோடியாக இருந்த ஜென் ஸீகளும்தான் அரசியல் கட்சிகளின் வெற்றியைத் தீர்மானிக்கக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் அவர்களைத் திரட்சியாக்கிய நிரல் படிமுறை (Algorithm).

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in