கண்டாரே கலக்கப் பெறுக...

கண்டாரே கலக்கப் பெறுக...
Updated on
2 min read

சங்க காலத்​திலிருந்தே விளக்​கேற்​று​தல் சிறப்​புக்​குரிய நிகழ்​வாகக் கருதப்​பட்​டது. பத்​துப்​பாட்​டிலும் எட்​டுத்​தொகை​யிலும் கண்​சிமிட்​டும் விளக்​கேற்​றல் காட்​சிகள் அந்​நாளைய சமூகம் அதற்கு எத்​தனை முதன்மை அளித்​திருந்​தது என்​ப​தைச் சுட்​டு​கின்​றன. குளத்​தில் மூழ்​கித் தூய்மை பெற்ற பிறகே மகளிர் இறையகத்​தில் விளக்​கேற்​றிய​தாகப் பட்​டினப்​பாலை பேசுகிறது.

நந்​தா​விளக்​கு, கார்த்​திகை விளக்​கு, மலரணி விளக்கு எனச் சங்​கம் சுட்​டும் விளக்கு வகைகள் பத்​தி​மைக் காலத்​தில் பலவாய்ப் பெரு​கின. விளக்​கேற்​றலை அருஞ்​செய​லாய்ப்போற்​றும் அப்​பர் பெரு​மான், இறைவன் அருளைப் பெற உடல் உறுப்​பு​கள் ஆற்​றக்​கூடிய பணி​களைப் பேசுமிடத்​தில், ஒளி உமிழும் விளக்​கு​களை இயன்​ற​போதெல்​லாம் ஏற்​று​வதே விரல்​கள் பெற்​றதன் பயன் என்​கிறார். இவ்​விளக்​கேற்​றும் பணி பல்​லவ, பாண்​டிய, சோழர் காலத்​தில் ஓர் அறமாகவே கைக்​கொள்​ளப்​பட்​டது. தமிழ்​நாட்​டுக் கோயில்​களி​லுள்ள பல்​லா​யிரக்​கணக்​கான கல்​வெட்​டு​களில் பெரும்​பாலனவை விளக்​கேற்​றல் பற்​றியே பேசுகின்​றன.

அக்​காலத்தே தமிழ்​நாட்​டிலிருந்த விளக்​கு​களின் வகைகள், அவை ஏற்​றப்​பட்ட முறை, விளக்​கேற்​றலின் நோக்​கம், அதற்​கெனத் தரப்​பட்ட கொடை வகைகள், அதையொற்றி உரு​வான அறக்​கட்​டளை​கள், அவை செயற்​பட்ட ஒழுங்கு - தணிக்கை செய்​யப்​பட்ட பாங்​கு, கொடை​யாளர்​களின் விளக்​கேற்​றல் தொடர்​பான விழைவு​கள் என இச்​செயல் சமு​தா​யத்​தின் பல்​வேறு நம்​பிக்​கைகள், நடை​முறை​கள், ஒழுகலாறுகள் குறித்த வரலாற்று விளக்​க​மாக விளங்​கியதைக் கல்​வெட்​டு​கள் விரி​வாகப் பேசுகின்​றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in