மக்களுக்கான அறிவியலைப் பரப்பியவர்

அறிவியலை மக்களிடம் கொண்டுசெல்வதில் அவர் காட்டிய ஆர்வம் மிகவும் தனித்துவமானது
மக்களுக்கான அறிவியலைப் பரப்பியவர்
Updated on: 
3 min read

சிலருக்கு அறிவியல் என்பது பாடப் புத்தகங்களில் சிறைப்பட்ட தகவல்கள். ஆனால் ஒரு சிலருக்கு, அது ஒரு வாழ்க்கை முறை. பேராசிரியர் யஷ் பால் (Yash Pal) இரண்டாவது வகை.

இந்திய அறிவியலின் மிக முக்கியத் தூண்களில் ஒருவர் யஷ் பால்; அறிவியலைச் சாதாரண மக்களுக்குக் கொண்டுசென்ற ஒரு மாபெரும் அறிவியல் தகவல் தொடர்பாளர்.

அறிவியல் ஆர்வம்

இன்றைய பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் ஜாங் (Jhang) என்னும் இடத்தில் 1926 நவம்பர் 26இல் யஷ் பால் பிறந்தார். அவரது குழந்தைப் பருவம் குவெட்டாவில் கழிந்தது. 1935இல் ஏற்பட்ட ஒரு பயங்கர நிலநடுக்கத்தில் அவரது வீடு முழுவதுமாக இடிந்துபோனது. இதனால் அவருடைய குடும்பம் தாய்வழிப் பாட்டனார் வீட்டுக்குக் குடியேறியது.

யஷ் பாலின் அறிவியல் பயணம் ஒரு சிறிய கம்பியில் தொடங்கியது. உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது, ஆசிரியர் ஒருவர் ஒரு துண்டு செப்புக் கம்பியைக் கொடுத்து, அதன் வெப்ப ஏற்புத் திறனை (specific heat) அளவிடச் சொன்னார்.

அதைப் பார்த்தபோது, அவருக்கு ஒரு பெரிய உண்மை புரிந்தது. வெப்பம் போன்ற புலப்படாத ஒன்றைக்கூட அளவிட முடியும் என்றால், பூமியின் எந்த ஒரு பொருளையும் - காற்றின் வேகம், நிலநடுக்கத்தின் விசை, விண்மீன்களின் தூரம் - சரியான கருவிகளை உருவாக்கினால் புரிந்துகொள்ள முடியும். அந்தத் தருணம்தான், அவரை வாழ்நாள் முழுவதும் இயற்பியலின் மீது காதல் கொள்ள வைத்தது.

பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், டெல்லி பல்கலைக்கழகத்தில் முது கலைப் பட்டமும் பெற்றார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக் காலத்தில் அவர் டெல்லியில் சிக்கிக்கொண்டார்; பாகிஸ்தானுக்குத் திரும்ப முடியவில்லை.

ஊரிலிருந்து பணம் அனுப்பும் வசதியும் இல்லை. எனினும், டி.எஸ்.கோத்தாரி போன்ற ஆசிரியர்களின் உதவியுடன் தனது படிப்பைத் தொடர்ந்தார்.

அறிவியல் பயணம்

யஷ் பாலின் அறிவியல் வாழ்க்கை மும்பையின் டாடா அடிப்படை ஆராய்ச்சிக் கழகத்தில் (TIFR) தொடங்கியது. அங்கு அண்டக் கதிர் (cosmic ray) குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டார்.

பெர்னார்ட் பீட்டர்ஸ் என்னும் அறிவியலாளருடன் இணைந்து, ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட பலூன்களில் ஒளிப்பட அடுக்குகளைத் தொங்கவிட்டு, 30,000 அடி உயரத்தில் அண்டக் கதிர்களைப் பதிவுசெய்தார்.

Loading content, please wait...

X