கலையின் ஜீவநதியாக ஓர் ஓவியக் கல்லூரி | சென்னை கவின் கலைக் கல்லூரி 175 ஆண்டுகள்

பிரிட்டிஷ்காரர்களால் உருவாக்கப்பட்டு இந்தியக் கலையை வளர்த்தெடுத்த நிறுவனம் இது
கலையின் ஜீவநதியாக ஓர் ஓவியக் கல்லூரி | சென்னை கவின் கலைக் கல்லூரி 175 ஆண்டுகள்
Updated on: 
2 min read

சென்னையில் டிராம்கள் ஓடிக்கொண்டிருந்த பூந்தமல்லி நெடுஞ்சாலையில், கம்பீரமான வாசல் கொண்ட பெரிய காவி நிறக் கட்டிடத்தை ஒரு சிறுவனாகப் பார்த்ததை இன்றைக்கும் என்னால் மறக்க முடியவில்லை. அதுதான் இந்தியாவில் முதன்முதலாகக் கலை, கைவினை நுட்பங்களைக் கற்றுக்கொடுப்பதற்காக பிரிட்டிஷ் அரசால் திறக்கப்பட்ட ‘மதறாஸ் ஸ்கூல் ஆஃப் ஆர்ட் அண்ட் கிராஃப்ட்.’

இன்றைக்குத் தமிழ்நாடு அரசு கவின்கலை - கைவினைக் கல்லூரியாகத் தனது 175ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. எனது பால்ய காலத்தில், தான் படித்த கலை - கைவினைப் பள்ளியைக் கடக்கும்போதெல்லாம் ஓவியராகிய என் தந்தை ஏ.பி.கஜேந்திரன், “டேய்.. நான் படிச்ச ஸ்கூல் ஆஃப் ஆர்ட் பாருடா” என்று சொல்ல மறந்தது கிடையாது. கலை இயக்குநராகவும் ஓவியராகவும் புகழ்பெற்றிருக்கும் என் தம்பி மகி மகேந்திரன், பின்னாள்களில் இங்குதான் கலை பயிலப்போகிறார் என்று அப்போது நான் நினைத்ததே இல்லை.

முன்னோடிக் கலைப் பள்ளி: பிரபல சிற்பி தேவி பிரசாத் ராய் சௌத்ரி மதறாஸ் கலை - கைவினைப் பள்ளியின் முதல்வராக 1930களில் இருந்தபோது என் தந்தை அங்கு முழு நேர மாணவராக ஓவியம் பயின்றார். இன்றைய ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் அப்போது ஒன்றிணைந்து இருந்த மதறாஸ் மாகாணத்துக்கான ஒரே கலைப்பள்ளி அதுதான். 1850இல் மதறாஸில் தொழிற்கல்விப் பள்ளி ஒன்று (School of Industrial Arts) அலெக்சாண்டர் ஹண்ட்டர் எனும் பிரிட்டிஷ்காரரால் தொடங்கப்பட்டது.

1852இல் அந்தப் பள்ளியை பிரிட்டிஷ் பொதுக் கல்வித் துறை ஏற்றுக்கொண்டபோது ஹண்ட்டர் புதிய பாடத்திட்டங்களைக் கொண்டுவந்தார். இதற்கென லண்டனில் இருந்த ‘ராயல் அகாடமி ஆஃப் ஆர்ட்’ நிறுவனத்துடன் கலந்து ஆலோசித்துத் தொழிற்கல்விக்கான அரசுப் பள்ளி நிறுவப்பட்டது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in