Published : 11 Jan 2019 09:16 AM
Last Updated : 11 Jan 2019 09:16 AM
அபிமான நடிகர்களின் திரைப்படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகம்.
நாயகன் அறிமுகமாகும் காட்சி தொடங்கி விசில் சகிதம் அதகளம் செய்வார்கள். பாடல்களுக்குத் திரையரங்கம் அதிரும். இந்தக் கொண்டாட்டம் ஆண்களுக்கு மட்டும் சொந்தமா என்ன?
ஆம், சென்னை திருநின்றவூர் வேலா திரையரங்கத்தில் பெண்களுக்கென்று பிரத்யேகமாகத் திரையிடப்பட்ட அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படத்தை ஆட்டம்பாட்டம் என்று அட்டகாசமாகக் கொண்டாடியிருக்கிறார்கள் ரசிகைகள். குடும்பத்துடன் திரையரங்கம் செல்வதே குறைந்துவிட்ட இன்றைய சூழலில், பெண்களுக்கான சிறப்புத் திரையிடல் என்பது ஆரோக்கியமான விஷயம். சென்னை திரையரங்குகளுக்குப் பெண்களுக்கான பிரத்யேகப் படக்காட்சிகள் புதிதல்ல. ஆனால், அதெல்லாம் அந்தக் காலம். இப்போது ‘விஸ்வாசம்’ படத்தின் மூலம் அது மீண்டும் தொடங்கியிருக்கிறது. வாழ்த்துகள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT