Last Updated : 02 Jan, 2019 09:27 AM

 

Published : 02 Jan 2019 09:27 AM
Last Updated : 02 Jan 2019 09:27 AM

2 மினிட்ஸ் ஒன்லி 24: மனம்தான் வாழ்க்கை!

புத்தாண்டின் முதல் வேலை நாள் இன்று. எல்லோரும் பரபரப்பாக ஓடத்தொடங்கி யிருக்கிறோம். புத்தாண்டு வாழ்த்து களோடு அனைவருக்கும் எல்லாமும் நல்ல விஷயங்களாக நடக்க வேண்டும் என நானும் பிரார்த்தனை செய்துகொள் கிறேன்.

ஆண்டு தொடக்கமாக இருக்கே? எதைப் பற்றி பேசுவோம்னு நினைத்துக்கொண்டே நானும் என் நண்பர் பஞ்சு மிட்டாயும் சேர்ந்து கடந்த சில நாட்களாக வெளிவந்த வார இதழ் களையும், நாளிதழ்களையும் புரட்டிக் கொண்டிருந்தோம்.

ஒவ்வொன்றிலும் 2018-ம் ஆண்டின் நம் பிக்கைக்கு உரியவர்கள், பணக்காரர்கள், பெண் பிசினஸ் சாதனையாளர்கள் என டாப் 10 தொடங்கி டாப் 100 வரைக்கும் பட்டியலிட்டி ருந்தனர். ஒரு இதழின் பட்டியலில் ஷாரூக் கான் முதல் இடத்தில் இருந்தால் மற்றொரு நாளிதழில் அவர் 17-வது இடத்தில் இருக் கிறார். ஒன்றில் சல்மான் கான் பெயர் இருந் தால், மற்றொரு பட்டியலில் அவர் பெயரே இல்லை. இதெல்லாம் பார்த்துவிட்டு புத்தாண் டாச்சே.. வெளியே போய்ட்டுவருவோம்னு நேற்று மாலை பஞ்சு மிட்டாயும், நானும் கிளம்பினோம்.

நான் வளர்ந்த சென்னை, திருவான்மியூர் பகுதியில் 6-வது, 7-வது படிக்கும்போதெல் லாம் வீட்டைவிட்டு வெளியே போகவே முடியாது. 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படிக்கும்போதுதான் வெளியே போக வீட்டுல அனுமதிச்சாங்க.

அந்த நேரத்துல ரெகுலரா எங்களோட நண்பர்கள் குழுவினர், ஒரு இடத்துல உட் கார்ந்து அரட்டை அடிச்சிக்கிட்டிருப்போம். அந்த இடத்துல ஒரு மனிதர் தள்ளுவண்டி யில் சுண்டல், பஜ்ஜி, வடை, சமோசா எல்லாம் விற்பனை செய்து கொண்டிருப் பார்.

மிளகாய் பஜ்ஜியை ஒரு மாலை மாதிரி அழகாகத் தொங்கவிட்டிருப்பார்.அதைப் பார்க்கும்போதே அந்த இடம் சொர்க்க லோகம் மாதிரி இருக்கும். அந்தப் பக் கம் போகும் யாராக இருந்தாலும் 2 வடை யாவது வாங்கி சாப்பிடாம போகவே மாட்டாங்க. அப்படி ஒரு ஈர்ப்பாக அவர் அந்தக் கடையை நடத்திவந்தார்.

நாங்க அந்த ஏரியாவுக்குத் தொடர்ந்து 3 நாட்களாக வர்றதை புரிஞ்சிட்டு எங்களுக்கு அக்கவுண்ட் வைத்து பஜ்ஜி, சமோசா, வடை கொடுக்க ஆரம்பித்தார். தினமும் மாலை 4.30 மணிக்கு வருவார். இரவு 10.30 மணி வரைக்கும் அங்கே இருப்பார். அவர் கொண்டுவந்த உணவு கலவைப் பொருட்கள் எல்லாம் 8.30 மணிக்கே தீர்ந்து விடும். டேஸ்ட்ல அந்த அளவுக்கு பிசினஸ் ஆகும்.

வர்றவங்க ஏமாந்துடக்கூடாதுன்னு எதிர்ல இருக்குற மளிகை கடைக்கு போய் கடலை மாவு வாங்கிட்டு வந்து திரும்பவும் வடை, பஜ்ஜி போடுவார். கொஞ்சம்கூட சலிப்பே அடைய மாட்டார். கூட்டமும் அலைமோதும்.

இதெல்லாம் பதினெட்டு, இருபது வருஷங் களுக்கு முன்னே. நடந்தது. சரி… நீண்ட நாட்களாச்சே. அந்தப் பக்கம் போய்ட்டு வருவோமேன்னு நண்பர் பஞ்சு மிட்டாயை அழைச்சிட்டு போனேன். அதே மனிதர், அதே கடை, அதே மாதிரி மிளகாய் பஜ்ஜி. மாலை கடைக்கு முன்பு கூட்டம். நாங்க நேற்று போனப்போ, மாலை 7.45 மணி இருக்கும். கடையில் வேலை பார்க்குற ஒரு பையனை மளிகை கடைக்கு போய் கடலை மாவு வாங்கிட்டு வர சொல்லி அனுப்பிக்கொண்டிருந்தார்.

‘அண்ணே எப்படி இருக்கீங்க? எங்களைத் தெரியுதா?’ன்னு நாங்க அறிமுகப்படுத்திக் கிட்டோம். ‘அட.. என்னப்பா. தெரியாதா? ஹேப்பி நியூஇயர். நீங்க எல்லாம் பெரிய ஆளாகிட்டீங்களே. ரொம்ப சந்தோஷம்பா..இந்தாங்க. வடை சாப்பிடுங்க. என்ன… இப்போ எல்லாம் நம்ம கடை வடைங்க உங் களுக்கு பிடிக்குமான்னுதான் தெரியல?’ன்னு சிரிச்சிக்கிட்டேஅன்பா நலம் விசாரித்தார். ‘அண்ணே.. தட்டுல வச்சுக்கொடுங்க?’ன்னு வாங்கி சாப்பிட ஆரம்பித்தோம்.

அந்த மனிதர்கிட்ட 20 வருஷங்களுக்கு முன்னே அக்கவுண்ட் வைத்து சாப்பிடும் போது எல்லா செலவும்போக ரூ.800-ல இருந்து ரூ.1,000 வரைக்கும் மிச்சம் பிடிக் கும்னு சொல்லுவார். இப்போ ஒரு நாளைக்கு ரூ.2,000-ல இருந்து ரூ.2,500 வரைக்கும் சம்பாதிப்பார்.

அவர் நினைத்திருந்தால் அதே பகுதியில் இன்னும் ரெண்டு, மூணு ஹோட்டல்கள்கூட திறந்திருக்கலாம். அப்படியும் இல்லையா? இதே மாதிரி இன்னும் ரெண்டு மூணு ஏரியாவுல சமோசா, பஜ்ஜி கடைகளைக் கூட திறந்து ஆட்களை வேலைக்கு அமர்த்தி பிசினஸ் செய்திருக்கலாம். அவருக்கு வசதி இல்லாமல் இல்லை. இப்படி எதுவுமே செய்யாமல் ஒரே இடத்தில் கடந்த 20 வருஷங்களாக அதே வேலையை செய்து கொண்டிருக்கிறார்.

இதை அவர்கிட்டயே கேட்போம்னு பேச்சுக் கொடுத்தேன். அதுக்கு அவர், ‘‘நல்ல கேள்விதான் தம்பி. எனக்கு என்னமோ இந்த இடத்தைவிட்டுட்டு இன்னொரு இடத்துக்கு போக மனசே வரல. உங்களை மாதிரி நிறையப் பேர் இங்கே மனசுக்கு பிடிச்சவங்களா ஆகிட்டாங்க. இந்த ஏரியா வுல என்ன பிரச்சினைன்னாலும் என்னை ஒரு முக்கிய ஆளாக்கி நியாயம் கேட்குறாங்க. சந்தோஷமா இருக்கு. முன்னே எல்லாம் மாதம் ரூ.25 ஆயிரம் வரைக்கும் சம்பாதிப் பேன். இப்போ ரூ.40 ஆயிரத்துல இருந்து ரூ.45 ஆயிரம் வரைக்கும் கிடைக்குது. இது போதுமே. பசங்க, பேரக் குழந்தைங்கன்னு சந்தோஷமா இருக்கோம். உங்களை மாதிரி ஒவ்வொரு காலகட்டத்துலயும் ஒவ்வொரு பேட்ச் பசங்க வந்துக்கிட்டே இருக்காங்க.அவங்க எல்லோரும் என்கூட தொடர்புல இருக்காங்க. இதைவிட பெருசா என்ன வேணும். இந்த உழைப்பும் போதும்னு தோணுது!’’ன்னு சிரிச்சிட்டே இன்னொரு வடையை எடுத்து என் தட்டுல வைத்தார்.

கடந்த 2018-ல நான் பார்த்த ‘வேர்ல்டு மோஸ்ட் ஹேப்பியஸ்ட்’ மனிதர்அவர்னு சொல்வேன். நான் படித்ததாக சொன்ன ‘டாப் 10 மனிதர்கள்’, ‘டாப் 10 செல்வந்தர்கள்’ என எதை வைத்து பட்டியலிடுகிறார்கள் என்பது தெரியல. பகல் முழுவதும் குடும்பத்தினரோடு சந்தோஷமா இருந்துவிட்டு, மாலை 4 மணிக்கு வேலையை தொடங்கி இரவு 10 மணி வரைக்கும் பிஸியாகஇருக்கிறார். நிம்மதியாக ஒரு கடையை அவரால் தொடர்ந்து பல வருஷங்கள் நடத்த முடியுது. கடன் தொல்லை இல்லை. அவர் கடைக்கு போனா டேஸ்ட் நல்லா இருக்கும்னு எப்பவும் ஒரு கூட்டம் அங்கே வருது. வேற என்ன வேணும்? அவரைவிட மகிழ்ச்சியான மனிதர் யார் இருப்பாங்க!

சமீபத்தில் வெளிவந்த ‘விஸ்வாசம்’ பட டிரெயிலர்ல நடிகர் அஜித் பேசும்போது, ‘வாழ்க்கையில ஒரு தடவை அழாத பணக்காரனும் இல்ல; ஒரு தடவை சிரிக்காத ஏழையும் இல்ல’ன்னு சொல்லுவார். அது நூற்றுக்கு நூறு உண்மை. சந்தோஷம் என்பது பணத்தை வைத்து வர்றதில்லை. அது மனசு சார்ந்த விஷயம்.

அந்த சந்தோஷத்தைத்தான் சுண்டல், சமோசா கடை நடத்தின அந்த மனிதரிடம் நான் பார்த்தேன். அதுவும் இத்தனை வருஷ இடைவெளிக்குப் பிறகு அவரை மீண்டும் பார்த்ததில் எனக்கும் பூரண சந்தோஷம். இப்படி ஒரு மகிழ்ச்சியான மனிதரைப் பற்றி இந்தப் புத்தாண்டின் தொடக்கத்தில் பேசுறதும், அதை உங்களிடம் பகிர்ந்து கொள்வதும் இன்னும் சந்தோஷம்.

- நிமிடங்கள் ஓடும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x