Last Updated : 02 Jul, 2018 09:27 AM

 

Published : 02 Jul 2018 09:27 AM
Last Updated : 02 Jul 2018 09:27 AM

பிரெக்ஸிட்டால் பிரிந்துகிடக்கும் பிரிட்டன்!

ரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது தொடர்பாக பிரிட்டனில் ‘பிரெக்ஸிட்’ வாக் கெடுப்பு நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகி யிருக்கும் நிலையில், வெளியேறுவது சரியா.. தவறா என்று இரு பிரிவுகளாகப் பிரிந்து நிற்கிறார்கள் பிரிட்டிஷ்காரர்கள். ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக மீண்டும் ஒரு கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனும் குரல்கள் எழுந்திருக்கின்றன. ஜூன் 23-ல் லண்டனில் 10,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பேரணியில், ‘பிரெக்ஸிட்டை மறுபரிசீலனை செய்யுங்கள், பிரிட்டனைப் புதுப்பியுங் கள்’ எனும் முழக்கங்கள் இடம்பெற்றன. இளைஞர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

பேரணியில் பேசிய கிரீன் கட்சித் தலைவர் கரோலின் லூகாஸ், “பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று வலி யுறுத்தியவர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை” என்று சுட்டிக்காட்டினார். “தேசிய சுகாதார சேவைக்காக ஒவ்வொரு வாரமும் சுமார் ரூ.3,000 கோடி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் என்னவாயின என்று கேள்வி எழுப்பினார். வாக்கெடுப்பின்போது, வடக்கு அயர்லாந்து தொடர்பான பிரச்சினைகள் பற்றி பலருக்குத் தெரிந்திருக்கவில்லை என்றும் பொதுக்கூட்டத்தில் பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். “இது முடிவுசெய்ய வேண்டிய தருணம். கட்டுப்பாட்டை மீண்டும் எடுத்துக்கொள்ள வேண்டிய தருணம்” என்று முழங்கினார் கினா மில்லர். இவர், பிரெக்ஸிட் விஷயத்தில் நாடாளுமன்றத்துக்கு உள்ள பொறுப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்.

பிரெக்ஸிட் வாக்கெடுப்பு மிகச் சிறிய வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. வெளியேறுவதற்கு ஆதரவாக 51.9% பேரும், எதிராக 48.1% பேரும் வாக்களித்தனர். குறிப்பாக, பிரிட்டனில் சமீபகாலங்களில் நடந்த பொதுத் தேர்தல் களைவிட, பிரெக்ஸிட்டில் அதிகமாக வாக்குகள் பதிவாகியிருந்தன. கடந்த 10 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் 61% முதல் 69% வரை பதிவான நிலையில், பிரெக்ஸிட்டில் 72.2% பேர் வாக்களித்திருந்தனர்.

பிரெக்ஸிட் வாக்கெடுப்பில், எதைப் பிரதானமாக எடுத்துக்கொள்வது? 50%-க்கும் அதிகமானோர் ஆதரித்து வாக்களித்ததையா அல்லது வாக்குகளின் எண்ணிக்கையில் இருக்கும் மிகச் சிறிய வித்தியாசத்தையா என்பது இன்றைக்குப் பெரிய அளவில் விவாதமாகியிருக்கிறது. வருங்காலத் தலைமுறையினரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இந்த முடிவை, குறைந்த வாக்கு வித்தியாசம் தீர்மானிப்பதா என்று விவாதங்கள் நடக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x