Last Updated : 12 Apr, 2018 09:19 AM

 

Published : 12 Apr 2018 09:19 AM
Last Updated : 12 Apr 2018 09:19 AM

தெலங்கானாவின் பகீரதன்

தெலங்கானா மாநிலத்தில் நடந்துகொண்டிருக்கும் சாதனைகளில் ‘பகீரதா’வையும் வெற்றிகரமாகச் சேர்த்திருக்கிறார் முதல்வர் கே.சந்திரசேகர ராவ். 2014-ல் சந்திரசேகர ராவ் முதல்வராகப் பொறுப்பேற்றபோது 82% மக்கள் ஃப்ளோரைட், நைட்ரேட் உள்ளிட்ட வேதிப் பொருட்கள் கலந்த நிலத்தடி நீரையே தங்கள் குடிநீர் தேவைக்காக சார்ந்திருந்தனர். நான்கு ஆண்டுகளுக்கு முன் நகர்ப்புறங்களில் உள்ள 12,82,545 வீடுகளுக்கும், கிராமப்புறங்களில் உள்ள 52,47,225 வீடுகளுக்கும் கிருஷ்ணா, கோதாவரி நதிகளிலிருந்து நீர் வழங்கும் திட்டத்தை அறிவித்தபோது பலரும் இதை ‘நிகழ முடியாப் பெருங்கனவு’ என்று கேலிசெய்தனர். ஆனால், இப்போது ஃப்ளோரைடு கலந்த நீரைப் பருகியதால் கை, கால்கள் செயல்படா நிலையை அடைந்தவர்கள் தம் அடுத்த தலைமுறை பாதுகாக்கப்பட்டதாக ராவுக்கு நன்றி சொல்கின்றனர்.

செப்டம்பர் 5, 2014 அன்று அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம் டிசம்பர் 2018க்குள் நிறைவுபெற வேண்டும் என்பதே ராவ் நிர்ணயித்துள்ள இலக்கு. ஜூனில் எல்லா வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுவிடும் என்பது இப்போதைய நிலை. திட்டத்தை நிறைவேற்றி முடிக்காமல் 2019-ல் நடக்க இருக்கும் மாநிலத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று உறுதியளித்திருக்கிறார். இப்போது தெலங்கானாவின் அனைத்து வீடுகளுக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்கும் பகீரதி திட்டத்தின் பெரும் பகுதி நிறைவடைந்துவிட்டது!

- ச.கோபால்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x