Last Updated : 21 Dec, 2023 06:10 AM

 

Published : 21 Dec 2023 06:10 AM
Last Updated : 21 Dec 2023 06:10 AM

ப்ரீமியம்
திட்டம் போடுவதாலேயே பிரச்சினைகள் தீர்க்கப்படுமா?

தமிழ்நாடு அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு விரைவாகக் கிடைக்கவும், மக்கள் அளிக்கும் மனுக்கள் மீதுவிரைவாகத் தீர்வு காணவும் ‘மக்களுடன் முதல்வர்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. கோவை எஸ்.என்.ஆர் கல்லூரி அரங்கத்தில் டிசம்பர் 18 அன்று நடைபெற்ற விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட் டத்தைத் தொடங்கிவைத்தார். மக்களிடம் பெற்ற மனுக்களுக்கு 30 நாள்களில் தீர்வு காண்பதே இத்திட்டத்தின் நோக்கம். ஆனால், ஏற்கெனவே இப்படிப் பல்வேறு திட்டங்கள் இருக்கும்போது திட்டத்துக்குத் திட்டம் என நீட்டித்துக்கொண்டே போவது சரியா என்னும் கேள்வியும் எழுகிறது.

புதிய திட்டம் என்ன சொல்கிறது? - முதல்வரின் தனிப் பிரிவில் அஞ்சல் மூலம் ஆயிரக்கணக்கான மனுக்கள், முதல்வரின் முகவரி - இணையவழிச் சேவையில் ஆயிரக்கணக்கான மனுக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திரக் குறை கேட்புக் கூட்டம், மாதம் ஒருமுறை மனுநீதி நாள் முகாம், மாதம் ஒருமுறை இரவில் ஆட்சியர்கள் கிராமத்தில் தங்கி மக்கள் தொடர்பு முகாம் மூலம் மனு பெறுதல் என ஏராளமான திட்டங்கள் நடைமுறையில் இருக்கும்போது, இத்திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சியிலும், 6 முதல் 10 வார்டுகளுக்கு உதவி இயக்குநர் தலைமையில் ஒரு குறைகேட்பு அலுவலர் நியமிக்கப்பட்டு, ஒரு பொது இடத்தில் திரட்டிவைத்து மனு பெறுவது; தொடர்ந்து அனைத்து வார்டுகளுக்கும் அட்டவணை வெளியிடப்பட்டு, அதன்படி மனு பெற்றுத் தீர்வு காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் பெறப்படும்போது, அலுவலக உதவியாளர் இருவர், கணினி இயக்குநர், அனைத்துத் துறை அலுவலர்கள் உடனிருக்க வேண்டும் எனப் பணிக்கப்பட்டுள்ளனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x