Published : 11 Sep 2022 12:05 PM
Last Updated : 11 Sep 2022 12:05 PM

சுதந்திரச் சுடர்கள் | பாரதியார் நினைவு நாள்: காலத்தை வென்ற பாரதியின் வரிகள்

இன்பமும் ஓர் கணத் தோற்றம்
இளமையும் செல்வமும் ஓர் கணத் தோற்றம்

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

உயிர்த் தீயினிலே வளர் ஜோதியே
என்றன் சிந்தனையே என்றன் சித்தமே

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்

உன் கண்ணில் நீர் வடிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

எடுத்த காரியம் யாவினும் வெற்றி
எங்கு நோக்கினும் வெற்றி மற்றாங்கே

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்

எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை
எல்லோரும் இந்நாட்டு மன்னர்

ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ?

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ

பாவி துச்சாதனன் செந்நீர்-அந்தப்
பாழ்த் துரியோதனன் ஆக்கை இரத்தம்,
மேவி இரண்டுங் கலந்து-குழல்
மீதினிற் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல் முடிப்பேன் யான்

மணி வெளுக்கச் சாணையுண்டு
மனம் வெளுக்க வழியில்லையே எங்கள் முத்து
மாரியம்மா எங்கள் முத்து மாரி

மெல்லத் தமிழ் இனிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்
என்றந்தப் பேதை உரைத்தான்
காசிநகர்ப் புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்

காற்றிலேறி விண்ணையும் சாடுவோம்

‘சாதி இரண்டொழிய வேறில்லை’யென்ற
தமிழ் மகள் சொல்லிய சொல் அமிழ்த மென்போம்

சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது
சொற்புதிது சோதிமிக்க நவ கவிதை

சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி
சொல்லில் விளைந்த சுடரே சக்தி

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா
இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ?

தனியொருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்

தீக்குள் விரலை வைத்தால் - நின்னைத்
தீண்டுமின்பம் தோன்றுதடா

தேமதுரத் தமிழோசை
உலகமெலாம் பரவும்வகை
செய்தல் வேண்டும்

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர் மணிப் பூண்

பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்
பாலித்திட வேண்டும்

பாழ்பட்டு நின்ற தாமோர் பாரதம் தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க

பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன்
கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்

மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்

வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான் புகழ் கொண்ட தமிழ்நாடு

விசையுறு பந்தினைப் போல் உள்ளம்
வேண்டியபடி செலும் மனம் கேட்டேன்

விதியே விதியே தமிழ்ச் சாதியை
என்செயக் கருதி யிருக்கின்றாயடா?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x