Published : 30 May 2016 12:33 PM
Last Updated : 30 May 2016 12:33 PM

அறிய வேண்டிய வரலாறு

தேர்தல் முடிவு, ஆட்சி அமைப்பு என்றெல்லாம் சிந்தனை செய்துவரும் இத்தருணத்தில், உண்மையான ஜனநாயகவாதி ஒருவரை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். 1958-ம் ஆண்டு புஞ்சைபுளியம்பட்டி ஊராட்சி மன்றத்துக்கு திமுகவைச் சேர்ந்த பி.ஏ.சாமிநாதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றுதொட்டு இன்றுவரை புஞ்சைபுளியம்பட்டி - நகராட்சி ஆன பிறகும் திமுக வசமே இருக்கிறது. 1965-ல் நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 15 வார்டுகளிலும் திமுகவினரே வென்றனர்.

அனைவரும் பாராட்டி மகிழ்ந்த அந்த நேரத்தில் இடித்துரைக்கும் எதிர்க்கட்சி இல்லாத மன்றம் சாமிநாதனுக்கு உறுத்தலாகவே இருந்திருக்கிறது. அடுத்த ஓராண்டுக்குள் இரண்டு உறுப்பினர்கள் இயற்கை எய்தியபோது, திமுக போட்டியிடாது என்று அறிவித்து காங்கிரஸ் உறுப்பினர் இருவர் மன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட வழிவகுத்தார். இத்தகைய விரிந்த மனம் கொண்டவர்கள் ஆங்காங்கு இருப்பதால்தான், நம் நாட்டில் மக்களாட்சி வேரூன்றியிருக்கிறது.

- அ.அய்யாசாமி, மேல்மாயில்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x