Published : 21 Mar 2016 10:15 AM
Last Updated : 21 Mar 2016 10:15 AM

காற்றில் பறந்த உறுதிமொழி

கோடிகளை வாரியிறைத்து, வாழும் கலை அறக்கட்டளை நடத்திய கலாச்சாரப் பெருவிழா அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை ‘யமுனைக்குச் செய்த துரோகம்’ தலையங்கம் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது. டெல்லியைத் தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி நடத்தும் மத்திய அரசும் டெல்லி மாநில அரசும் அனுமதி வழங்கி, தாகத்தைத் தீர்க்கும் யமுனைக்குத் துரோகம் இழைத்தது பெருத்த வேதனை. ‘1,000 பேர் கொண்ட குழு நிகழ்ச்சி நடந்த இடத்தைத் துப்புரவு செய்யும்’ என்ற உறுதி காற்றில் பறக்கவிடப்பட்டது ஏமாற்றத்தின் உச்சம்!

- எஸ்.சொக்கலிங்கம், கொட்டாரம்.



எதிர்நீச்சல் தலைவர்

வைகோ எனும் போராளியைப் பற்றிய விருப்பு வெறுப்பற்ற நடுநிலையான கண்ணோட்டத்துடன் எழுதப்பட்ட ஒரு கட்டுரையாக ‘உருவானார் வைகோ’ இருந்தது. கருணாநிதியை எதிர்த்து எம்ஜிஆர் செய்த அரசியல் காலம் 15 ஆண்டுகள். ஆனால், வைகோ செய்யும் அரசியல் 23 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. ஒரே வித்தியாசம், எம்ஜிஆர் ஓரிரு தோல்விகளை மட்டும் சந்தித்தார். வைகோவோ ஓரிரு வெற்றிகளை மட்டுமே சந்தித்துள்ளார். தமிழகத்தில் அண்ணா காலம் முதல் அம்மா காலம் வரை அரசியல் கடலில் மூழ்கிப்போனவர் பலர். மாறாக, கடலில் முத்தெடுக்க முடியாவிட்டாலும் மூழ்கிப்போகாமல் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டிருக்கும் தலைவர்களில் வைகோவும் ஒருவர்!

- சுப்பையா முத்து, தூத்துக்குடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x