Published : 03 Oct 2015 10:40 AM
Last Updated : 03 Oct 2015 10:40 AM

தாயின் அருமை

‘மாயா’ திரைப்படத்தின் தாக்கம், ஆதரவற்ற பெண்களைப் பற்றி 'மாயா: தாயின் தனிமை' எனும் அருமையான கட்டுரையை எழுத வைத்துள்ளது. ‘பராசக்தி’ திரைப்படத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் குணசேகரன் தங்கை கல்யாணி, இட்லி வியாபாரம் செய்வதைப் பார்த்து ஆதரவற்ற பெண்களுக்கு இருக்கும் ஒரே தொழில் இதுதான் என்பதுபோல் பேசுவார்.

அரை நூற்றாண்டு கடந்தும் இன்றும் அதே நிலைதான் உள்ளது. நகரங்களில் இருக்கும் தனித்து வாழும் பெண்களை விடக் கிராமங்களில் தனித்து வாழும் பெண்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் இன்னும் அதிகம். அதிலும் பாலியல் சார்ந்து கொடுக்கப்படும் நெருக்கடிகளும் தொடுக்கப்படும் அவதூறுகளும் கொடுமையிலும் கொடுமை. இவை அனைத்தையும் தாங்கிக்கொண்டு பிள்ளைகளை வளர்த்துப் பெரிய பொறுப்புகளில் அமர வைத்து அழகு பார்க்கும் தாய்க்குப் பிள்ளைகள் உரிய அங்கீகாரம் கொடுக்கிறார்களா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியே.

வறுமை, அவமானம், அவமரியாதை என அத்தனையையும் சுமந்துகொண்டு பிள்ளைகளுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் தாய்க்கு நமது அன்பையும் ஆதரவையும் அளிப்பதே நாம் அவர்களுக்குத் தரும் உரிய அங்கீகாரம் என்பதை உணர வைத்த கட்டுரை அருமை!

- ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x