Published : 01 Sep 2015 10:45 AM
Last Updated : 01 Sep 2015 10:45 AM

பொதுத் துறை வங்கிகளின் செயல்பாடு

செயல்பாட்டில் உறுதி வேண்டும் தலையங்கம் படித்தேன். இன்றைய தினம் பொதுத் துறை வங்கிகளுக்குக் கடும் சவாலாக விளங்கும் வாராக் கடன்கள் பிரச்சினையை எதிர்கொள்ளச் சரியான திட்டங்களை வகுக்காமல், எந்த சீர்திருத்த நடவடிக்கைகளும் பலன் தராது.

மேலும், பொதுத் துறை வங்கிகளில் தனியார் துறையில் பணிபுரிந்தவர்களை நியமனம் செய்துள்ளது, இனி வங்கிச் சேவை என்பது மேல்தட்டு மக்களுக்கே என்ற எண்ணத்தை உருவாக்கி உள்ளது. பொதுத் துறை வங்கிகளுக்கு மூலதனம் தந்துவிட்டு வாராக் கடன்கள் வசூலிப்பில் முறையான அதிகாரம் தராமல் இருப்பது, கால்களைக் கட்டிக்கொண்டு ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ளச் சொல்வதற்குச் சமம்.

பொதுத் துறை வங்கிகளில் புழங்கும் பணம், நம் நாட்டு மக்கள் உழைத்துச் சம்பாதித்தது. இதனை அரசு மனதில்கொண்டு செயல்பட வேண்டும். தலையங்கத்தில் கூறியதுபோல பொதுத் துறை வங்கிகள் ராஜநடை போட ஒரு எழுச்சி தரும் மறுமலர்ச்சித் திட்டமும் அதை உறுதியாகச் செயல்படுத்தும் செயல்பாடுகளும் வேண்டும். வெற்று அறிவிப்புகளாலேயே வண்டி ஓட்ட முடியாது என்ற கருத்து நிச்சயமான உண்மை!

- ஜா. அனந்த பத்மநாபன்,திருச்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x