Published : 12 Aug 2015 10:35 AM
Last Updated : 12 Aug 2015 10:35 AM

சரியான தருணம்

கருத்துப் பேழையில் ‘மதுவும் மக்களரசியலும்!’ கட்டுரை படித்தேன். ஃபிராங்ளின் ஆசாத் காந்தி, சசி பெருமாள், இளைய தலைமுறை நந்தினி போன்றவர்களால் பரவலான மது ஒழிப்பு விழிப்புணர்ச்சி, சசி பெருமாள் மரணத்தால் வீறுகொண்டுள்ளது.

இந்த விழிப்புணர்வைத் தடம் மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு சமூக ஆர்வலர்களுக்கு உண்டு. மதுவுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை வீடு வீடாகச் சென்று செய்வோம்.

அப்படிச் செய்யும்போது மக்கள் மதுக் கடைக்குச் செல்வது குறையும்.

- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

***

மிகப் பெரிய ஆறுதல்

காந்தி மதுவை எந்த அளவுக்கு வெறுத்தார் என்பது உலகம் அறிந்தது. மதுவால் அடித்தட்டு மக்கள் படும்பாட்டைக் கண்டு வேதனையுற்று ‘கள்ளுக் கடை’ மறியல் போராட்டத்தைக் கையிலெ டுத்தார்.

அது தமிழகத்திலும் பிரதிபலித்தது. பெரியார் கூட தனக்குச் சொந்தமான தென்னை, பனை மரங்களை வெட்டிச் சாய்த்தார். காந்தியின் தடயம் மறையவில்லை. சில இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் போராடிக் கொண்டிருக்கின்றன. மதுவுக்கு எதிராக ஊடகங்களும் இளைஞர் களும் போராடிவருவது மிகப் பெரிய ஆறுதல்.

-கி. ரெங்கராஜன், திருநெல்வேலி.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x