Published : 03 Jul 2015 10:55 AM
Last Updated : 03 Jul 2015 10:55 AM

நீதித் துறையை நம்ப வேண்டும்

எந்த அளவுக்கு ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்கிறது? என்கிற கட்டுரையின் இறுதியில் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது.

‘‘பல்சாக் தன்னுடைய நாவல் ஒன்றில் குறிப்பிட்டிருப்பார், ‘நீதித் துறையை அவநம்பிக்கையோடு பார்ப்பதில் தொடங்குகிறது ஒரு சமூகத்தின் முடிவு. இப்போதைய அமைப்புகளின் மாதிரியை உடையுங்கள், வேறு அடிப்படையில் அதைப் புதிதாக உருவாக்குங்கள். ஆனால், அதை நம்புவதை மட்டும் கைவிட்டுவிடாதீர்கள்’ என்று. எந்த ஒரு சமூகத்திலும் நீதித் துறை ஆற்ற வேண்டிய முக்கியப் பங்கை இது எடுத்துக்காட்டுகிறது. இன்றைய இந்தியாவில் அரசியல் சட்டம் தனக்களித்த கடமையிலிருந்து இந்திய நீதித் துறை நழுவுவதாகவே தோன்றுகிறது.”

இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய பாபா சாகேப். டாக்டர் அம்பேத்கரே ஒருமுறை இப்படிச் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. “I am bound by the decision of the court, but I am not bound to respect the same (நான் நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படுகிறேன். அனால், அதை மதிக்க நான் கடமைப்பட்டவனல்ல)’’ என்றார். இன்றைய நீதிபதிகள் தங்களின் தீர்ப்புக்கு மக்கள் கட்டுப்பட்டே ஆக வேண்டும் என்று நினைப்பதைவிட, தங்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டாலே போதுமானது என்று கருதுகிறேன்.

- பொ. நடராசன் நீதிபதி (பணி நிறைவு), மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x