Published : 18 Apr 2015 10:27 AM
Last Updated : 18 Apr 2015 10:27 AM

எதிர்பார்க்கவில்லை

‘ஒருபிடி மண்’ தொடரை இவ்வளவு சீக்கிரம் முடிப்பீர்கள் என எதிர்பார்க்கவில்லை. நிலம் இன்னும் விரிந்திருக்க வேண்டும்.

உண்ண, உடுக்க, உறங்க ஒவ்வொரு உயிருக்கும் ஆதாரமான நிலத்தைத் தேவைப்பட்டால் அரசோ பெருநிறுவனங்களோ எடுத்துக்கொள்வார்கள், நீங்கள் கேள்வி கேட்க முடியாது. இந்தத் தொடருக்குப் பிறகுதான் நிலத்தைக் கையகப்படுத்திவிட்டால் நீதிமன்றத்துக்குக் கூடப் போக முடியாது என்பதைப் படித்தவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

இந்தச் சட்டம் அமலாவதைத் தடுக்கும் பொறுப்பு அல்லது விவசாயத்தை பாதிக்காதவகையில் திருத்தம் கொண்டுவரும் பொறுப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு உண்டு. தவறினால் வீதியில் இறங்கிப் போராடுவதையோ, இந்தச் சட்டத்தைக் கொண்டுவரத் துடிக்கிற அரசுகள் வீழ்வதையோ யாரும் தடுக்க முடியாது.

கூத்தப்பாடி மா. கோவிந்தசாமி,தருமபுரி.

விவசாயம் அழியக் கூடாது

சமஸ் எழுதிய ‘ஒரு பிடி மண்’ கட்டுரை வாசித்தேன். விவசாயிகளையும், விவசாய பூமிகளையும் அழித்துவிட்டு விவசாய நிலங்களை சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு மாற்றுவது என்பது சரியான முறை அல்ல.

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் இவை மூன்றும் மனிதனின் அத்தியாவசியத் தேவைகளாகிவிட்டன. விவசாயத்தை அழித்துவிட்டுத் தொழில் தொடங்கினால், எதிர்காலத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும்.

எனவே, விவசாயம் அழியாமல் காப்பது அரசின் மிக முக்கியமான கடமையாகும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என அனைத்து நில வளமை கொண்ட இந்தியாவில் விவசாயம் செழிக்கவில்லை என்றால் வளர்ந்த நாடுகள் நம்மைப் பற்றி என்ன நினைக்கும்?

- எம். ஆர். லட்சுமிநாராயணன்,கள்ளக்குறிச்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x