Published : 17 Sep 2014 08:05 PM
Last Updated : 17 Sep 2014 08:05 PM

ரயில் முன்பதிவு டிக்கெட்: இதுதான் தீர்வு

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள வேகத்தால் ஏற்படும் பாதிப்புபற்றிய >செய்தியில் இரண்டு தவறான செய்திகள் இடம்பெற்றுள்ளன. செய்தியாளர் வேகம் அதிகரிக்கப்பட்ட இணையதளத்தில் சங்கேத (captcha) வார்த்தைகள் இல்லை என்கிறார். ஆனால், இணையதளத்தில் உள்ளே நுழைவதற்கும் தகவல்களை உறுதிப்படுத்துவதற்குமாக இரண்டு இடங்களில் சங்கேத வார்த்தைகள் இருக்கின்றன.

தகவல்கள் என்னதான் தயார் நிலையில் இருந்ததாலும், ஒரு நொடியில் டிக்கெட் புக் செய்துவிடலாம் என்பது ஏற்புடைதல்ல. பணம் செலுத்த வங்கி 'கேட்வே' சென்று திரும்பி ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்துக்கு வருவதற்குச் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். தட்கல் மற்றும் விழா நாட்களில் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.

சில சமயங்களில் வங்கியிலிருந்து பணம் பட்டுவாடா ஆகியிருக்கும். ஆனால், டிக்கெட் புக் ஆகிவிட்டதை உறுதிப்படுத்த மூன்று நான்கு மணி நேரம்கூட ஆகலாம். தட்கல் முறையில் புக் செய்பவர்கள் நேரத்தின் அருமை கருதி உடனடியாக வேறு ரயிலில் புக் செய்து பணத்தை இழப்பதும் உண்டு. புக் ஆகாவிட்டால், பணம் ஓரிரு நாளில் திரும்பக் கிடைத்துவிடும் என்பதும் உண்மை.

வீட்டிலிருந்தபடியே தொலைபேசிக் கட்டணம், மின்சாரக் கட்டணம், வங்கி சேவை போன்று ரயில்வே புக்கிங்கும் காலத்தின் கட்டாயம். வளர்ச்சியின் வெளிப்பாடு. இணையதளப் பயன்பாட்டு நேரத்தைக் குறைப்பது அதற்குத் தீர்வாகாது. இரட்டைப் பாதை, மின்மயக்குதல், நெருக்கடி உள்ள பாதைகளில் அதிக எண்ணிக்கையில் ரயில்களை இயக்குதல், அதிக பெட்டிகளை இணைத்தல் ஆகியவையே தீர்வாக முடியும். அதுவரை கவுன்டர்களை 24 மணி நேரமும் இயங்கச் செய்யலாம்.

- ச.சுப்ரமணியன்,மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x