Published : 30 Jun 2016 10:48 AM
Last Updated : 30 Jun 2016 10:48 AM

யானையின் தேவை

கிராமங்கள் நகரமயமாகிவருவதும், காடுகள் குறுகுவதும் இயல்பாகிவிட்டது. இதனால், பாதிப்புக்குள்ளாகும் வன விலங்குகளில் யானைகளும் அடங்கும்.

யானைகள்மீது அக்கறை கொண்டு, அதன் பாதுகாப்புக்கான முயற்சிகளை முடிந்த அளவு மேற்கொண்டாலும், மதுக்கரை மகராஜின் மரணத்தைப் போல யானைகளின் மரணங்கள் தொடர்வதைத் தவிர்க்க முடியவில்லை.

கோவை சதாசிவம் எழுதிய ‘ஆதியில் யானைகள் இருந்தன’புத்தகம் யானையைப் பற்றிய மாய எண்ணத்தை உடைத்துவிட்டது.

பிரம்மாண்ட உயிரினமான யானையின் பாதங்கள் ஒரு புல் பூச்சியைக்கூடச் சேதப்படுத்தாத மென்மையான அமைப்பைக் கொண்டதாகவும், யானையின் வலசை காடுகளில் வாழும் பல்லுயிர்களுக்கும் பயனுள்ளதாகவும் அந்த நூல் விவரிக்கிறது.

ஜெயமோகனின் ‘அறம்’ உண்மைக் கதைத் தொகுப்பில், யானை மருத்துவர் கிருஷ்ணமூர்த்தியைப் பற்றிய கதையில் யானைகளைப் பற்றிப் படிக்கும்போது நமக்கே கண்ணீர் வரும்.

- விளதை சிவா, சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x