Published : 02 Apr 2019 10:11 AM
Last Updated : 02 Apr 2019 10:11 AM

எண்களில் அண்ணா

13 - அண்ணா எழுதி அரங்கேற்றப்பட்ட நாடகங்களின் எண்ணிக்கை.

10 - திரைக்கதை, வசனம் எழுதிய திரைப்படங்களின் எண்ணிக்கை.

22 - அண்ணாவின் புனைபெயர்களின் எண்ணிக்கை. சௌமியன், பரதன், காலன், பேகன், வீரன், ஒற்றன், நக்கீரன், தமிழ்த்தொண்டன், வர்தன், குறிப்போன், சமதர்மன், வழிப்போக்கன், தமிழன்பன், கொழு, பாரதி, குயில், பாரத், வீனஸ், மணிமொழி என்று அவை விரிகின்றன.

113 - சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.

11 - அண்ணா பங்களித்த பத்திரிகைகளின் எண்ணிக்கை.

12,775 - தமிழ் சொற்பொழிவுகளின் எண்ணிக்கை. ஆங்கில உரைகளின் எண்ணிக்கை 400 என்கிறார்கள்.

316 - தம்பிக்கு அண்ணா எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை.  இவையே மூவாயிரம் பக்கங்களைத் தாண்டும்.

1,476 - மகன் பரிமளத்தால் ஆவணப்படுத்தப்பட்டுள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை. அண்ணா எழுதிய மொத்தக் கட்டுரைகள் மூவாயிரத்தைத் தொடும் என்கிறார்கள் கழக முன்னோடிகள். சில மிகப் பெரியவை; தொடராக வந்தவை.

77 - கவிதைகளையும் எழுதியிருக்கிறார் அண்ணா.

24 - அண்ணா எழுதிய குறுநாவல்களின் எண்ணிக்கை.

4 - அரசால் தடைசெய்யப்பட்ட அண்ணாவின் நூல்களின் எண்ணிக்கை. ‘திராவிடர் நிலை’, ‘விடுதலைப் போர்’, ‘இலட்சிய வரலாறு’, ‘ஆரிய மாயை’. ஆறு முறை சிறை சென்ற அண்ணா, அதில் ஒரு முறை நூல் எழுதியதற்காகவும் சென்றார்.

129 - ஆங்கிலக் கட்டுரைகளின் எண்ணிக்கை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x