Published : 24 Sep 2014 10:53 AM
Last Updated : 24 Sep 2014 10:53 AM

மனநலமற்றவர்களும் மனிதர்களே

‘ஆதரவின்றி மனநலம் பாதிக்கப்பட்டவர் காயத்துடன் உயிருக்குப் போராடும் பரிதாபம்' செய்தி படித்தேன். தெருவில் திரியும் நாய்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் ஓடிவருவதற்கு ‘ப்ளூ கிராஸ்' அமைப்பு உள்ளது. ஆனால், சக மனிதர்கள் மனநலம் பாதிக்கப்பட்டு ரோட்டில் திரியும்போது அவர்கள் மீது அக்கறைக் காட்டுவதற்கு எந்த அமைப்போ அல்லது அதுகுறித்த விழிப்புணர்வோ இல்லை என்பது வேதனையான விஷயம்.

மனநலம் பாதிக்கப்பட்டு ரோட்டில் திரிபவர்கள் பசியால் உணவகங்களின் வாசல் முன் நின்றால், அவர்கள் மீது வெந்நீர் ஊற்றும் காரியங்களும் இங்கே அரங்கேருவது வேதனை. மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் மனிதர்கள்தான். அவர்களும் நம்மைப் போன்று, நேற்று வரை குடும்ப உறவு, நட்புகளோடு வாழ்ந்திருப்பார்கள் என்று சிந்தித்துப் பார்ப்பவர்கள் எத்தனை பேர்?

தொண்டு நிறுவனமோ, அரசோ அல்லது இரண்டும் இணைந்தோ இல்லங்கள் அமைத்துச் செயல்பட்டால்தான் தமிழ்நாட்டுச் சாலைகளில் சக மனிதன் நாயை விடக் கேவலமாக நடத்தப்படுவதைத் தடுக்க முடியும். அதற்கு, மக்கள் அனைவரும் அறிந்த 108 சேவையைப் பயன்படுத்த அரசு ஆவன செய்ய வேண்டும்.

- ஜேவி,சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x