Published : 10 Jan 2019 08:44 AM
Last Updated : 10 Jan 2019 08:44 AM

360: பாலிவுட் படங்களின் தாக்கத்தில் இந்தி கற்றுக்கொள்ளும் அமெரிக்கர்கள்

பாலிவுட் பாடல்களைக் கேட்டு தங்கள் இந்தி அறிவை மேம்படுத்திக்கொள்பவர்கள் உண்டு. தற்போது, பாலிவுட் படங்களால் கவரப்பட்டு இந்தி கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள் அமெரிக்கர்கள். வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் கற்றுத் தரப்படும் இலவச இந்தி வகுப்பில் 110 அமெரிக்கர்கள் சேர்ந்திருக்கிறார்கள். மாணவர்கள் அதிகரித்திருப்பதால், மேலும் ஒரு வகுப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. பிரேசிலியர்கள், ஜெர்மானியர்கள் உள்ளிட்டோரும் இந்தி வகுப்பில் சேர்ந்திருக்கிறார்கள். இந்தியப் பெண்களைத் திருமணம் செய்ய விரும்புபவர்களும் ஆர்வத்துடன் இந்தி கற்றுக்கொள்கிறார்களாம். பாலிவுட் திரைப்படங்களுக்கு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், எகிப்து வரை ரசிகர்கள் உண்டு. இன்றைக்கு அமெரிக்காவும் அந்தப் பட்டியலில் சேர்ந்திருக்கிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x