Published : 12 Dec 2018 09:46 AM
Last Updated : 12 Dec 2018 09:46 AM

2 மினிட்ஸ் ஒன்லி 21: கருணையின் வடிவம் பபுள்ஸ்!

ஒரு பிரேக்கிங் நியூஸோட இந்த வாரத்தை ஆரம்பிப்போம். கடந்த சில நாட்களாக என்னோட ‘எல்.கே.ஜி ' படத்தோட பாடல் படப்பிடிப்புக்காக டெல்லி யில் இருந்தேன். படத்தில் வர்ற ஒரு பாட்டை மட்டும் நண்பர் விக்னேஷ் சிவன் டைரக் ஷன் செய்து கொடுத் திருக்கார். பாலிவுட்ல சில மீயூசிக் வீடியோக்கள் உருவாகும்போது அதை மற்றொரு இயக்குநர் டைரக்‌ ஷன் செய்து கொடுப்பாங்க. அந்த மாதிரிதான் இயக்குநர் விக்னேஷ் சிவன் இந்த வேலையை எனக் காக சிறப்பாக முடித்துக் கொடுத் திருக்கிறார். இந்தப் பிரேக்கிங் செய்தியை ‘இந்து தமிழ்’ நாளித ழில் இந்தத் தொடர் வழியே வாசகர்களுக்கு சொல்வதில் மகிழ்ச்சி.

நான் திரும்பத் திரும்ப சொல் வது இந்தத் தொடர் என் வாழ்க் கையை பற்றியோ, என்னோட தற் பெருமைகள் குறித்ததோ அல்ல. நான் பார்த்த மனிதர்கள் பற்றிய தொடர். அந்த வரிசையில் சொல் லும்போது இந்த வாரம் நான் டெல்லி யில் பார்த்த ஒரு மனிதரைப்பற்றி எழுதுகிறேன். அதுக்காகத்தான் இந்தப் படப்பிடிப்பு பற்றிய விஷ யத்தை உங்கக்கிட்ட பகிர்ந்து கொண்டேன். நான் பார்த்த அந்த நபரை, மனிதர் என்பதை விட ‘மாமனிதர்’னுதான் சொல் வேன்.

‘எல்.கே.ஜி’ அரசியல் சம்பந்த மான ஒரு திரைப்படம் என்பதால் டெல்லியில் உள்ள ‘பார்லிமெண்ட்’, ‘இந்தியா கேட்’னு சில இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம். அங்கே படப்பிடிப்பு என்பது சாமானிய வேலை அல்ல. ஒரு சாலையில் படமாக்க வேண்டும் என்றால் 15 நிமிடங்கள்தான் பர்மிஷன் இருக் கும். அவ்வளவு கட்டுபாடுகள். அந்த மாதிரி பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த நேரத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு இந்தியா கேட் முன்பு படப்பிடிப்பு நடத்த ஆயத்த மானோம். அன்றைக்கு விடுமுறை நாள் என்பதால் ‘இந்தியா கேட்’ முன்பு அப்போ 2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரம் பேர்கிட்ட இருந்தாங்க. நேரம் ஆகஆக கிட்டத்தட்ட 7 ஆயிரம் பேர் கிட்ட கூடிட்டாங்க.

அணிலாடும் முன்றில்

அப்போது அந்த ஏரியாவில் குழந் தைகளைக் கவரும்விதமாக ஒரு பபுள்ஸ் வியாபாரி விற்பனை செய்து கொண்டிருந்தார். படப்பிடிப்பில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த இயக்குநர் விக்னேஷ் சிவன் பாட லின் ஒரு காட்சிக்கு பபுள்ஸ் முட்டைகள் காற்றில் மிதப்பது போல இருந்தால் நன்றாக இருக்கும்னு விரும்பினார். அவரை அழைத்து விஷயத்தை விளக்கி ஒரு ஆங்கிளில் ஷூட் செய்து முடித்தோம்.

அடுத்த சில நிமிடங்களுக்குப் பிறகு, இன்னொரு ஆங்கிளில் படமாக்க வேண்டும் என்று அவரைத் தேடியபோது அந்த பபுள்ஸ் வியா பாரியைக் காணவில்லை. உதவி இயக்குநர்களை அனுப்பித் தேடினால் அவர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது தெரிய வந்தது.

ஒரு காட்சியை படமாக்கும் போது பத்து, இருபது ஆங்கிளில் அதை எடுப்போம் என்கிற விஷயம் அவருக்குத் தெரியாது. அதனை விளக்கி திரும்பவும் அழைத்து வந்து படமாக்கினோம். அதை முடித்துவிட்டு கேமரா லென்ஸ் மாற்றிய நேரத்தில் திரும்பவும் அந்த பபுள்ஸ் வியாபாரியை காணவில்லை. பார்த்தால் 100 அடி தூரத்தில் இருந்த அதே மரத்துக்கு கீழ் போய் உட்கார்ந்திருந்தார். நானே அவர் அருகே போய், ‘கியா பையா?’ என ஹிந்தியில் கேட்டேன். அப்போது அந்த மரத்துக்கு கீழே பாப்கார்ன்கள் கொட்டிக்கிடந்தன. அதனை ஏழு, எட்டு அணில்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தன. அதில் சில அணில்கள் அவர் மடியிலும், தோள்பட்டையிலும், காலுக்குக் கீழேயும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தன.

‘புள்ளினங்காள்’

சமீபத்தில் வெளியான ‘2.0’ படத்தில் வர்ற ‘புள்ளினங்காள்’ பாடலில் அக்‌ஷய்குமாரைச் சுற்றி பறவைகள் இருப்பதைப் போல அந்த பப்புள்ஸ் வியாபாரியைச் சுற்றி அணில்கள் மொய்த்தன. இந்த மாதிரி நிஜத்துல லட்சத்தில் ஒரு மனிதர் இருக்கிறார் என கேள்விப்பட்டிருப்போம். அதே மாதிரி ஒருவரை பார்த்த மனநிலை தான் அன்று. நாமெல்லாம் ஒரு அணிலை பார்த்தாலே அது ஓடிடும். ஆனால், அந்த மனிதர் மீது ஏறி விளையாடுகின்றன. அதுவும் ஒரு நாள், இரு நாட்கள் அல்ல. கடந்த 9 ஆண்டுகளாக அங்கே உள்ள 11 அணில்களோடு பழகி வருகிறார் என்கிற விஷயம் அவரிடம் பேசும் போது தெரியவந்தது. அவை களுக்கு பாப்கார்ன், பால், சாப்பாடு என அவ்வபோது உணவுகளைப் பரிமாறி வரும் செயலை, அந்த பபுள்ஸ் வியாபாரி செய்து வருகிறார்.

‘என்ன பையா, இங்கே எட்டு அணில்கள்தான் இருக்கு. மீதி எங்கே?’ன்னு கேட்டேன். ‘அது முன்பே வந்து பால் சாப்பிட்டுட்டு போயிடுச்சு. கொஞ்ச நேரத்துக் குப் பிறகு வரும்’னு கூலாக சொன்னார்.

ஒரு நாளைக்கு பப்புள்ஸ் விற் பனையில் 150 ரூபா வரைக்கும் கிடைக்கும். சில நாட்களில் அது வும் இல்லை. அந்த பப்புள்ஸ் வியா பாரிக்கு சொந்த ஊர் உத்தரப் பிரதேசம். குடும்பத்தினர் எல்லோ ரும் அங்கேதான் இருக்காங்க. எப்படியும் அவர் மாதம் 4 ஆயிரம் ரூபாய் பார்ப்பதே அபூர்வம். அந்த வருமானத்துலதான் அவர் ஊருக்குப் போய்ட்டும் வரணும். அந்த மாதிரி ஒரு வியாபாரி கடந்த 9 ஆண்டுகளாக தன்னோட பிள்ளைங்க மாதிரி நினைத்து அந்த அணில்களுக்கு உண வளித்து வருகிறார். தினம் தினம் ஆயிரக்கணக்காணோர் கூடுகிற ஒரு இடத்தில் அவர் வருவார்னு தினமும் காத்திருக்கும் அந்த அணில்கள்னு நினைத்துப் பார்க் கவே ஒரு மாதிரி இருந்தது.

நினைவே சந்தோஷம்

சில சம்பவங்கள் கேள்விப் படும்போதும், பார்க்கும்போது உடம்பு சிலிர்க்கும். சில விஷயங்கள் கண்ணீரை வரவழைக்கும். அந்த மாதிரிதான் இந்த பபுள்ஸ் வியா பாரியை நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் கண் கலங்குகிறது, இப்படிப்பட்ட மனிதர்களும் நம் மைச் சுற்றி இருக்கிறார்களே என்று. தன்னோட சின்ன வருமானத்தில் தினமும் 11 அணில்களை அவரோட குடும்பம் மாதிரி நினைத்து கவனித்து வருகிறார். அதனால்தான் திரும்பவும் சொல்கிறேன். உதவி செய்யணும்கிற மனதுதான் இங்கே முக்கியம். அது எவ்ளோ பெரியது என்பது முக்கியமல்ல. அதுவும் மற்றொரு மனிதருக்குத்தான் என் பதும் அல்ல. இந்த மாதிரி அணிலுக்குக்கூட இருக்கலாம். அந்த மனது இருந்தால் போதும்.

நான் உயிரோடு இருக்குற வரைக்கும் இந்த மனிதர் என் நினைவில் நிச்சயம் இருப்பார். அதுவும் அவரை நேரில் பார்த்துக் கொண்டிருப்பதாகவே நினைக் கிறேன். ஆகவே உதவி செய்ய எனக்கு நேரமில்லை. நான் ஏழையாக இருக்கிறேன். என்னிடம் பணமில்லை. அப்படியெல்லா நினைக்க வேண்டாம். செய் யணும் என்கிற மனது இருந்தால் போதும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x