Published : 27 Nov 2018 09:05 AM
Last Updated : 27 Nov 2018 09:05 AM

தவிக்கும் தமிழகம்: கை கொடுக்க வாருங்கள்!

அன்பான வாசகர்களே,

இம்மாதம் வீசிய கஜா புயலால் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி முழுமையாக தெரியவர சில நாட்கள் ஆகிவிட்டன. அங்கு ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகளில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களைக் காக்க உங்கள் உதவியை நாடுகிறோம்.

இந்த பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் நீங்களும் பங்கேற்க வேண்டும் என்று ‘தி இந்து’ விரும்புகிறது. எனவே, ‘The Hindu Relief Fund’ க்கு நன்கொடை வழங்குங்கள். இதன்மூலம் திரட்டப்படும் நிதி ‘தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதி’க்கு வழங்கப்படும்.

நீங்கள் அளிக்கும் நிதியை ‘The Hindu Relief Fund’ என்ற பெயருக்கு இந்திய ரூபாய் மதிப்பில், குறுக்கே கோடிட்ட காசோலை அல்லது வரைவோலை (சென்னையில் மாற்றத்தக்க வகையில்) அனுப்ப வேண்டும். இணைப்பு கடிதத்தில் உங்கள் பெயர், வருமான வரிக் கணக்கு எண் (இருப்பின்) மற்றும் முகவரி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.

இவற்றை ‘The Hindu Relief Fund’, கஸ்தூரி பில்டிங்ஸ், எண்: 859-860, அண்ணாசாலை, சென்னை 600 002 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

வங்கிகள் மூலம் நேரடியாக பணம் அனுப்ப விரும்புவோர் ‘The Hindu Relief Fund’, Central Bank of India, Mount Road branch, Chennai (826, Tarapore Towers, Anna Salai). IFSC: CBIN0280879. Current Account No. 3453685237 என்ற கணக்கிற்கு அனுப்பலாம். இவ்வாறு அனுப்புபவர்கள் தங்கள் பெயர், முகவரி, வருமான வரிக்கணக்கு எண் (இருப்பின்) மற்றும் வங்கி பாஸ்புக்கில் உள்ள UTR எண் ஆகிய விவரங்களை ‘helptamilnadu@thehindu.co.in’ என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம். அல்லது தபால் வாயிலாகவும் அந்த விவரங்களை மேற்கண்ட முகவரிக்கு அனுப்பலாம். இந்த விவரங்கள் இல்லாவிட்டால் தங்களுக்கு ரசீது அனுப்புவதில் மிகுந்த சிரமம் ஏற்படும்.

காசோலை, வரைவோலை (டிடி) அல்லது வங்கி பணப் பரிமாற்றம் மூலம் அனுப்புபவர்கள் தங்களுடைய -

பெயர்:

வருமான வரிக்கணக்கு எண் (இருப்பின்):

நன்கொடை அளிக்கும் தொகை:

முழு முகவரி (பின்கோடு உட்பட):

வங்கி பணப் பரிமாற்றம்/ காசோலை/ வரைவோலை (டிடி) எண்: ஆகிய விவரங்களுடன் அனுப்புமாறு வேண்டுகிறோம்.

-ஆசிரியர்
இந்து தமிழ் திசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x