Published : 27 Jul 2018 09:05 AM
Last Updated : 27 Jul 2018 09:05 AM

வழிகாட்டும் அக்னிச் சிறகுகள்

உங்கள் நம்பிக்கைகளும் கனவுகளும் லட்சியங்களும் நொறுங்கிப்போனால், அவற்றின் சிதைவுகளில் தேடுங்கள். அவற்றுக்கிடையே பொன்னான வாய்ப்புகளை நீங்கள் கண்டடையலாம்.

வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி. சந்தேகத்தை அறவே விடுத்து அலட்டிக்கொள்ளாமல் இருக்கும்போது அபாரமான செயல்பாட்டுக்குப் பலன் கிடைக்கும்.

அறிவாற்றல்தான் நிதர்சனமான, நிலையான சொத்து. உங்களுடைய வேலையில் பயன்படும் மிக முக்கியமான சாதனமும் அதுதான். எந்த அளவுக்கு உங்களுடைய அறிவுத் திறத்தினால் இப்போதைய நிலவரம் வரை தெரிந்து வைத்திருக்கிறீர்களோ அந்த அளவுக்கு நீங்கள் சுதந்திரமான மனிதர்.

துடிப்பாக இருங்கள். பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் நம்பிக்கைகொண்டுள்ள காரியங்களுக்காக வேலைசெய்யுங்கள்.

முறையான ஒருங்கிணைப்பு இல்லாவிட்டால் கடுமையான உழைப்பெல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிவிடும்.

தங்களுடைய தொழிலில் சிகரத்தை எட்ட விரும்புகிறவர்களுக்கு அடிப்படைத் தகுதி முழுமையான பொறுப்புணர்வு.

வெற்றிகரமான சாதனைக்கு நான்கு அடிப்படை அம்சங்கள் அவசியம். அவை: இலக்கு நிர்ணயம், ஆக்கபூர்வமான சிந்தனை, கற்பனைக் கண்ணோட்டம் மற்றும் நம்பிக்கை.

எவ்வளவு தூரம் நான் கடந்துவருகிறேன் என்பதைவிட இன்னும் எவ்வளவு தூரத்தைக் கடக்க வேண்டியுள்ளது என்பதில் கவனம் செலுத்துவதுதான் என்னுடைய ஊக்க சக்தியின் அச்சாணி.

மகத்தானவர்கள் காணும் மகத்தான கனவுகள் எப்போதுமே நனவாகின்றன.

தனது புள்ளியை - அதாவது - இலக்கைக் குறிவைத்துத் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொரு சின்னப் புள்ளியும் பெரும்புள்ளிதான். எனவே, சளைக்காமல் முயற்சித்துக்கொண்டிருங்கள்.

உங்களின் உள் ஆதாரங்களை, குறிப்பாகக் கற்பனை வளத்தைப் பயன்படுத்திக்கொண்டு அதையே வாழ்க்கையின் முதலீடாக மாற்றிக்கொள்ள ஆசைப்படுங்கள். அந்த ஆசை உங்களுக்கு வெற்றியைத் தரும்.

நம் அனைவருக்குள்ளும் ஏதோ ஒருவித அதி அற்புத அறிவாற்றலை வைத்துக்கொண்டிருக்கிறோம். அடி ஆழத்துக்குள் புதைந்துகிடக்கும் எண்ணங்களை. ஆசைகளை, நம்பிக்கைகளை ஆராய்ந்து பார்க்க அந்த அறிவாற்றல் தூண்டப்பட வேண்டும்.

- ‘அக்னிச் சிறகுகள்’ நூலிலிருந்து...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x