Published : 18 May 2018 08:37 AM
Last Updated : 18 May 2018 08:37 AM

இப்படிக்கு இவர்கள்: பாலகுமாரனின் எழுத்து நடை அலாதியானது!

சௌந்தர மகாதேவன்,

திருநெல்வேலி.

பாலகுமாரனின்

எழுத்து நடை

அலாதியானது!

லக்கியத்தின் நுனியை ஆன்மிகத்தோடு கொண்டுசேர்த்தவர் பாலகுமாரன். அவர் எழுதிய விதுரநீதி மிக எளிமையானது. சனத் சுஜாதரின் பிரம்ம ரகசியத்தை அவர் எழுத்து நடையில் படிப்பது அலாதியானது. தேவாரம், திருவாசக வரிகளை மிகச் சரியாக நாவல்களின் பாத்திரங்கள் பாடுவதாகக் கொண்டுவந்து இணைத்துவிடுவார். திருபூந்துருத்தியும், காதற்பெருமானும், தாயுமானவனும் வாசகர்களால் பரவ லாக வாசிக்கப்பட்டவை. கடந்த மூன்று ஆண்டுகளாக முகநூலில் தினமும் எழுதிக்கொண்டிருந்தார். ‘பாலகுமா ரன்ரைட்டர் டாட் காம்’ எனும் தன் இணையதளத்தின் வாயிலாகவும் நிறைய புதிய வாசகர்களைத் தன் எழுத்துகளின் பால் ஈர்த்தார். அதில் கடந்த ஏப்ரலிலிருந்து அவர் எழுதத் தொடங்கிய ‘காதோடுதான் பேசுவேன்’ பகுதி வெகுசுவாரசியமானது. அத்தொடரில் நாத்திகத்துக்கும் ஆத்திகத்துக்குமான வேறுபாட்டினை பாலகுமாரன் மிக அழகாகச் சொல்லியுள்ளார். நாத்திகனாக இருப்பது ஒரு கொடுப்பினை, ஆத்திகனாக இருப்பது ஒரு அமைதி. சிலருக்குச் செல்வம் கூடுதலாகக் கிடைப்பதுபோல.. சில சௌகரியங்கள் தானாக ஏற்படுவதுபோல நாத்திகம் வந்து கவிழும். இது எல்லோருக்கும் கிடைக்காது. வரலாற்றுப் பாத்திரங்களோடு புனைவைச் சேர்த்து எழுதிய கல்கியின் நீட்சியாக பாலகுமாரனைச் சொல்லலாம். ராஜராஜ சோழன் குறித்தும் சோழப் பேரரசு குறித்தும் ஆறு பாகங்களில் அவர் எழுதிய உடையார், 21 பதிப்புகள் கண்டிருக்கின்றன. பாலகுமாரன் குறித்த ‘தி இந்து’வின் பதிவுகள் மிகச் சரியாக அமைந்திருந்தன.

முனைவர் மா.மு.மணி, சேலம்.

குழந்தைகள் விரும்பும் பென்

உலகெங்கிலும் உள்ள எல்லா குழந்தைகளுக்கும் பென் பிடிக்கும். தங்கள் பேனா பென்சில் போன்ற அனைத்து உபகரணங்களிலும் பென் படம் அல்லது பெயர் இருப்பதை விரும்புகின்றனர். பத்து வயதுச் சிறுவன் பெஞ்சமின் பற்றி விவரித்துள்ளார் மருதன் (மே 16 ). பெஞ்சமின் ஃபிராங்க்ளின்தான் பென். அவர் இடிதாங்கியைக் கண்டுபிடித்தார் என்பதை மாணவர் அறிவர். ஆனால், அவரது பிற சாதனைகளைப் பலரும் அறியார். மூக்குக்கண்ணாடி அவரது கண்டுபிடிப்பு. மேலும், அமெரிக்கப் பொதுநூலகம், அஞ்சல் துறை உருவா கக் காரணமாயிருந்தவர் என்பது வியப்பாக உள்ளது.

இரா.ரமேஷ் குமார், அமராவதி நகர்.

வதந்தியே ஒரு வன்முறைதான்

குழந்தை கடத்தல் கும்பல் பற்றி சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட வதந்திகளால் அப்பாவிகள் கொல்லப்படுதல் தொடர்பான தலையங்கம் (மே 16 ), அதன் எல்லா கோணங் களையும் விவரித்தது. உண்மையைவிட வேகமாகப் பரவும் வதந்தியைப் பகுத்தறிவு கொண்டு உள்வாங்குவது எல்லா காலத்துக்கும் இன்றியமையாதது. அதுவே ஆரோக்கியமான சமுதாயத்தை நிலைபெறச் செய்யும். தன் நிலத்தில் வாழ வழியின்றி நம்மை நாடிவந்த அப்பாவி ஏழைகளுக்கு நாம் கொடுக்க வேண்டியது ஆதரவே அன்றி.. வன்முறை அல்ல. மொழி புரியாமல் செய்த பிழை என இதை நியாயப்படுத்தவும் முடியாது.

சுந்தர்.அழகேசன், திருச்சுழி.

அற்புதப் படைப்பாளி ஞாநி

மே12 அன்று வெளியான ‘தீம் தரிகிட: ஓங்கி ஒலித்த ஒற்றைக் குரல்’ வாசித்தேன். பத்திரிகை வாசிப்பவர்கள் பெரும்பாலானவர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த ஓர் அற்புதப் படைப்பாளி ஞாநி. இந்தப் படைப்பு அவருக்கு நல்ல அஞ்சலி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x