Published : 10 Apr 2024 05:29 PM
Last Updated : 10 Apr 2024 05:29 PM

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024

மத்திய மாவட்டங்களில் உள்ள தனித்தொகுதிகளில் ஒன்று நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி. கடலோரப்பகுதியும், காவிரி டெல்டாவின் விவசாயப் பகுதியையும் ஒருங்கிணைத்துக் அமைந்திருக்கும் தொகுதி இது. தமிழகத்திலேயே அதிகளவு விவசாயக் கூலித் தொழிலாளர்கள் உள்ள பகுதி. நாகையில் மீனவர்கள் வாக்கு வங்கியும் கணிசமாக உள்ளது. பெரிய தொழில்கள் ஏதும் இல்லாத இந்தத் தொகுதியில், விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது. காவிரி நீரை நம்பி லட்சக்கணக்கான விவசாயிகள் இந்தத் தொகுதியில் உள்ளனர்.

அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு குறிப்பிடத்தக்க அளவு வாக்கு வங்கி இருக்கிறது. நீண்டகாலமாகவே இந்தத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், திமுகவும் மாறி மாறி வென்றுள்ளன. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இருந்தபோது கூடுதல் வாக்கு வித்தியாசத்துடன் வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

திமுக தலைவர் கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளையை உள்ளடக்கிய திருவாரூர் தொகுதியும், நாகை மக்களவையில் தொகுதியில் இடம் பெற்றுள்ளது. வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதியில் குறிப்பிட்ட இடங்களில் பாமகவுக்கும் வாக்குகள் உள்ளது. இஸ்லாமிய சமூகத்தினரின் வாக்குகளும் குறிப்பிடத்தக்க அளவு உள்ளன. மற்றபடி காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்குப் பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லாத தொகுதி இது. இடம்பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:

• நாகபட்டினம்
• கீழ்வேளூர்
• வேதாரண்யம்
• திருத்துறைப்பூண்டி
• திருவாரூர்
• நன்னிலம்

நாகப்பட்டினம் தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 13,38,459
• ஆண் வாக்காளர்கள்: 6,54,850
• பெண் வாக்காளர்கள்: 6,83,528
• மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 81

முந்தைய தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள்:


ஆண்டு

வெற்றி பெற்றவர்

2-ம் இடம் பிடித்தவர்
1971 காத்தமுத்து, சிபிஐ சபாசிவம், ஸ்தாபன காங்

1977
முருகையன், சிபிஐ கருணாநிதி, திமுக
1980 கருணாநிதி, திமுக முருகையன், சிபிஐ

1980
இடைத்தேர்தல்
முருகையன், சிபிஐ
மகாலிங்கம், அதிமுக
1984 மகாலிங்கம், அதிமுக
முருகையன், சிபிஐ

1989
செல்வராசு, சிபிஐ வீரமுரசு, காங்
1991 பத்மா, காங்கிரஸ் செல்வராசு, சிபிஐ

1996
செல்வராசு, சிபிஐ கனிவண்ணன், காங்

1998
செல்வராசு, சிபிஐ கோபால், அதிமுக

1999
விஜயன், திமுக
செல்வராசு, சிபிஐ

2004

விஜயன், திமுக
அருச்சுனன், அதிமுக
2009 விஜயன், திமுக செல்வராசு, சிபிஐ

2014

கோபால், அதிமுக
விஜயன், திமுக

2019
M. செல்வராசு, சிபிஐ
சரவணன் M, அதிமுக

2019-ம் ஆண்டு நாகப்பட்டினம் மக்களவைத் தேர்தலின் நிலவரம்:

2024-ம் ஆண்டு நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

கட்சி வேட்பாளர்
திமுக செல்வராசு (சிபிஐ)
அதிமுக சுர்ஜித் சங்கர்
பாஜக ரமேஷ்
நாம் தமிழர் கட்சி மு.கார்த்திகா

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x