Published : 06 Apr 2024 11:17 AM
Last Updated : 06 Apr 2024 11:17 AM

திண்டுக்கல் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024

தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு அதிக மாற்றங்களைக் கொண்ட தொகுதியில் திண்டுக்கல்லும் ஒன்று. பழனி நாடாளுமன்ற தொகுதி நீக்கப்பட்டு அதில் இருந்து பழனி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட சட்டப்பேரவைத் தொகுதிகள் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் இணைக்கப்பட்டன.

அதிமுக என்னும் திராவிட இயக்கம் உதயமானதும், அது சந்தித்த முதல் தேர்தல் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல். திமுகவில் இருந்து பிரிந்த புதிய கட்சியை தொடங்கிய எம்ஜிஆர் சந்தித்த முதல் தேர்தலிலேயே அவருக்கு வெற்றியைத் தேடித் தந்தது திண்டுக்கல் தொகுதி. மிகப்பலத்துடன் இருந்த திமுகவை மூன்றாவது இடதுக்குத் தள்ளி இடைத்தேர்தல். இந்தத் தேர்தலில் எம்ஜிஆர் களமிறக்கிய வேட்பாளர் மாயத்தேவர் பெரும் வெற்றி பெற்றார்.

அதிமுகவுக்கு தேர்தல்தோறும் வெற்றி தேடித்தரும் சின்னமான இரட்டை இலையும் இந்தத் தேர்தலில் தான் களம் இறங்கியது. அதுமுதலே திண்டுக்கல் தொகுதி அதிமுகவுக்கு பல தேர்தல்களில் வெற்றி தேடி தந்துள்ளது. பெரும்பாலும் அதிமுகவும், திமுகவும் நேரடியாக மோதியுள்ள இந்தத் தொகுதியில் சிலமுறை கூட்டணியுடன் காங்கிரஸ் வென்றுள்ளது. இடம்பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:

• திண்டுக்கல்
• நத்தம்
• பழனி
• ஒட்டன்சத்திரம்
• ஆத்தூர்
• நிலக்கோட்டை (தனி)

திண்டுக்கல் தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 15,97,458
• ஆண் வாக்காளர்கள்: 7,75,432
• பெண் வாக்காளர்கள்: 8,21,808
• மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 218

முந்தைய தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள்


ஆண்டு
வெற்றி பெற்றவர்
2-ம் இடம் பிடித்தவர்


1971


ராஜாங்கம், திமுக

சீமச்சாமி, சுதந்திரா கட்சி


1977

மாயத்தேவர், அதிமுக

பாலசுப்பிரமணியம், சிபிஎம்


1980

மாயத்தேவர், திமுக

ராஜன் செல்லப்பா, அதிமுக
1984
நடராஜன், அதிமுக

மாயத்தேவர், திமுக


1989

திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக

ராஜன் செல்லப்பா, அதிமுக

1991
திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக
மாயத்தேவர், திமுக

1996

என்எஸ்வி சித்தன், தமாகா


திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக
1998 திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக
என்எஸ்வி சித்தன், தமாகா

1999
திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக
சந்திரசேகர், திமுக

2004

என்எஸ்வி சித்தன், காங்கிரஸ்

ஜெயராமன், அதிமுக
2009
என்எஸ்வி சித்தன், காங்கிரஸ்

பாலசுப்பிரமணி, அதிமுக

2014

உதயகுமார், அதிமுக
காந்திராஜன், திமுக

2019
வேலுசாமி P, திமுக
ஜோதிமுத்து K, பா.ம.க

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் அதிமுக 7 முறையும், காங்கிரஸ் 2 முறையும், திமுக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

2019-ம் ஆண்டு திண்டுக்கல் மக்களவைத் தேர்தலின் நிலவரம்:

2024-ம் ஆண்டு திண்டுக்கல் மக்களவைத் தொகுதி: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x