Published : 23 Nov 2017 10:47 AM
Last Updated : 23 Nov 2017 10:47 AM

குஜராத் தேர்தலின் மறுபக்கம்!

கு

ஜராத் சட்ட மன்றப் பொதுத் தேர்தலில் முதலில் பலிகடாவாகியிருப்பது ‘நினைவுகள்’. ஆம். 2002-ல் மிகப் பெரிய வகுப்புக் கலவரம் நடந்த மாநிலம் என்ற எண்ணமே நீங்கிவிட்டதைப் போல அரசியல் களம் காணப்படுகிறது. எல்லோருமே மற்ற பிரச்சினைகள் குறித்தே கவனம் செலுத்துகின்றனர். ஒரு வன்முறைச் சம்பவம் நடந்த பிறகு, அது எப்படி நம்முடைய ஆழ் நினைவில் சென்று பதுங்குவதுடன், நம்முடைய அன்றாட வாழ்க்கையில் வெவ்வேறு விதங்களில் வெளிவருகிறது என்பதைப் பற்றிப் பேசுகிறேன்.

எதையும் மறக்கக் கூடாது என்று நான் கூறவில்லை. அது ஆரோக்கியத்துக்கும் நல்லதல்ல. அத்தகைய நினைவுகள் மறைந்துவிடும் அல்லது அமிலத்தைப் போல அரித்துக்கொண்டேயிருக்கும். ஆனால், இந்த மறதி செயற்கையாக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூற விரும்புகிறேன். மறதியும் கட்டாய நினைவழிப்பும் ஒன்றல்ல. வன்செயல்கள் ஏற்பட இதுதான் காரணம்: ‘இது இயல்பே’ என்று சமுதாயம் கருதினால், அது சமூகத்தைப் பிணி பிடித்துவிட்டதற்கான அடையாளம்.

பாஜக இப்போது சக்திவாய்ந்த பெரிய கட்சி. அதை எதிர்த்தால் நம்மைத் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்ற அச்சம் பலரிட மும் நிலவுகிறது. வகுப்புவாத உத்தியை பாஜக மறக்கப்போவதில்லை; அதனுடைய வளர்ச்சி - சாதனைகள் பிரச்சாரம் எடுபடா மல் போகும் நிலை வரும்போது வகுப்புவாதத்தையும் அது கையாளும். காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி எதிர்பாராத வகையில் வாக்காளர்களைக் கவரத் தொடங்கிவிட்டார். உள்ளூர் காங்கிரஸ்காரர்களும் மக்களை ஈர்க்கக்கூடிய பிரச்சினைகளைப் பேசத் தொடங்கிவிட்டனர் என்பதால், பாஜக தன்னுடைய பழைய ஆயுதத்தை எடுத்து வீசத் தயங்காது. இப்போது மதம் அழுத்தப்பட்டு, சாதி உணர்வு தலைதூக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது. குஜராத்தில் இப்போது தலித்து கள் பிரச்சினை, படேல்கள் பிரச்சினைகள் அதிகம் பேசப்படுகின்றன.

காங்கிரஸ் கட்சி மதச்சார்பின்மை என்ற கொள்கையை குஜராத் பிரச்சாரத்தில் உச்சரிப்பதுகூட இல்லை. ஒரு காலத்தில் மேடைக்கு மேடை இதைத்தான் காங்கிரஸ் பேசியது. இப்போது பேசவே கூசுகிறது. தேர்தல் காலத்தில் மதச்சார்பின்மையைப் பேசியது அந்தக் காலம். கேட்டுக் கேட்டுப் புளித்துவிட்டது. வகுப்புக் கலவரம் பற்றி மட்டும் அல்ல, மதச்சார்பின்மை குறித்தும் பேசாமலிருக்கும் வகையில் பிரச்சாரம் நடக்கிறது. மதச்சார்பின்மை என்ற வார்த்தையை உச்சரிக்கவே தயங்கும் அளவுக்கு பாஜக அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்துவிட்டது. எதிர்க்கட்சிகள் வீரியமாகப் பேசும் ஆற்றலையும் கற்பனைத் திறனையும் இழந்துவிட்டன.

ஆட்டுக் குட்டிகளின் இந்த மெளனம் அரசியல் விவாதங்களின் தரம் எப்படியெல்லாம் தாழ்ந்துவிட்டது என்பதற்கு மற்றுமொரு உதாரணம். சமூகத்தின் எதிர்காலத்தைப் பற்றிய விவாதக் களமாக இல்லாமல், வெவ்வேறு குழுக்களின் நலன்களைப் பற்றி மட்டுமே அக்கறைப்படுவ தாகிவிட்டது தேர்தல். இது இப்போது வெறும் எண்ணிக்கை விளையாட்டாகி விட்டது. வேறு இரு விஷயங்கள் தொடர் பான மௌனமும் குறிப்பிடத்தக்கது.

முதலாவதாக, வல்லபபாய் படேலைப் பற்றிய பெருமைகளைப் பேசுவதால் காந்தி யின் கனவுகளைப் பேசுவதில்லை யாரும். அது ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்தப்பட்டிருக்கிறது. பாஜகவின் அரசியல் அரங்கில் படேலுக்குத்தான் முதலிடம், காந்திக்கு இரண்டாவது பட்சம்தான்.

இரண்டாவது, அதானியின் ஆஸ்திரேலி யத் தொழில் முயற்சியால் உலக அளவில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை. கார்மைக்கேல் நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து நிலக்கரியை வெட்டி எடுத்து கப்பல்கள் மூலம் இந்தியாவுக்கு எடுத்து வருவதற்கு ஆஸ்திரேலிய சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர். குஜராத் தில் அது ஒரு சில கேள்விகளைக்கூட எழுப்பவில்லை. மாநிலத்தின் கடற்கரையோரப் பகுதிகள் மெல்ல மெல்ல ஆக்கிரமிப்புக்கு உள்ளாவதுகூட சிறிய அதிர்வை யும் ஏற்படுத்தவில்லை!

இதில் இறுதி அம்சம் ஒன்றிருக்கிறது. மக்கள் இதைப் பேச்சின் இறுதியில்தான் தெரிவிக்கின்றனர். அரசியல் களத்தில் நிலவும் சில அச்சங்களே சில விவகாரங்கள் குறித்து யாரும் பேசாமலிக்கக் காரணங்களாக இருக்கின்றன. பாஜக இப்போது பெரும்பான்மை வலுவுள்ள கட்சி என்பது மட்டுமல்ல, 2019 மக்களவை பொதுத் தேர்தலிலும் அதுவே வெற்றிபெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடும் என்ற எண்ணமும் நிலவுகிறது. ஆளும் பாஜகவின் அதிருப்தியாளர்கள், சிறுபான்மைச் சமூகத்தவர், ஜனநாய கவாதிகள் அச்சம் தெரிவித்தாலும் அதை அதிகமாக வெளிப்படுத்த விரும்பவில்லை.

இப்படி பின் குறிப்புபோல அவர்கள் தெரிவிக்கும் அச்சங்கள் இணைந்து, எதிர் கால இந்திய அரசியலைத் தீர்மானிக்கும் என்று அஞ்சுகிறேன்!

தமிழில்: சாரி

©: ‘தி இந்து’ ஆங்கிலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x