

திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான வாலியின் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டு தோறும் வாலி பதிப்பகம் சார்பில், ‘வாலி விருது’ வழங்கப்பட்டு வருகிறது. கவிஞர் ஒருவருக்கும் எழுத்தாளர் ஒருவருக்கும் வழங்கப்படும் இந்த விருது தலா ரூ.50 ஆயிரம் விருதுத் தொகையும், பொற்கிழியும் கொண்டது.
2026ஆம் ஆண்டுக்கான வாலி விருதுக்கு கவிஞர் அறிவுமதியும், திரைப்பட ஆய்வாளர் திருநின்றவூர் சந்தான கிருஷ்ணனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அக்டோபர் 31ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் விழாவில், மலேசிய மேனாள் அமைச்சர் டத்தோ சரவணன் விருதுகளை வழங்குகிறார்.