புக்கர் பரிசு யாருக்கு?

புக்கர் பரிசு யாருக்கு?
Updated on: 
2 min read

ஒரு விருது என்​பது வெறும் பதக்​கம் அல்ல; அது ஒரு கால​கட்​டம் தன்​னைத்​தானே வாசித்​துப் பார்க்​கும் கண்​ணாடி. 57 ஆண்​டு​களாக ஆங்​கிலப் புனை​வின் திசையைத் தீர்​மானிப்​ப​தில் புக்​கர் பரிசு பெரும் தாக்​கம் செலுத்​துகிறது. அத்​தகைய முக்​கி​யத்​து​வம் மிகுந்த புக்​கர் பரிசு இந்த ஆண்டு யாருக்​குக் கிடைக்​கப் போகிறது என்​பது உலகெங்​கிலும் உள்ள இலக்​கிய ஆர்​வலர்​கள் மத்​தி​யில் பெரும் எதிர்​பார்ப்பை ஏற்​படுத்​தி​யிருக்​கிறது.

இந்த ஆண்டு போட்​டிக்கு வந்த 163 நூல்​களில் இருந்து ஜூலை 28இல் வெளி​யான நீண்ட பட்​டியலுக்கு 13 படைப்​பு​களும், அதிலிருந்து செப்​டம்​பர் 22இல் வெளி​யான சுருக்​கப் பட்​டியலில் 6 படைப்​பு​களும் தேர்​வாகி​யுள்​ளன.

1969இல் தொடங்​கிய இந்​தப் பரிசு, முதலில் நிதி​யுதவி செய்த புக்​கர் நிறு​வனத்​தின் பெயருடன் திகழ்​கிறது. தற்​போது இந்​தப் பரிசுப் போட்​டியை புக்​கர் பரிசு அறக்​கட்​டளை நடத்​துகிறது. எழுத்​தாளர் நேரடி​யாக விண்​ணப்​பிக்க இயலாது; இங்​கிலாந்​து, அயர்​லாந்​துப் பதிப்பகங்கள் மட்​டுமே நூல்​களைச் சமர்ப்​பிக்க முடி​யும். வெற்​றி​யாள​ருக்கு 50,000 பவுண்​டும் (சு​மார் ரூ. 54 லட்​சம்),இறு​திப் பட்​டியலில் இடம்​பெற்ற மற்ற ஐந்து பேருக்​கும் தலா 2,500 பவுண்​டும் பரி​சாக வழங்​கப்​படு​கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in