பார்த்தீனியக் காட்டில் பயிரைத் தேடுதல்​ | நூல் வெளி

பார்த்தீனியக் காட்டில் பயிரைத் தேடுதல்​ | நூல் வெளி
Updated on
1 min read

‘கடலில் எவ்​வளவு உப்​பு, மனிதரில் அவ்​வளவு தப்​பு’ எனும் பின்​னட்டை குறிப்​பில் வரும் இச்​சொற்​கள் சமூகத்​தில் எப்​படி​யெல்​லாம் வினை​யாற்​றுகிறது என்​பதை நாராயணி கண்​ணகி​யின் ’ தப்​பு’ நாவல் விவரிக்​கிறது.

பெரும்​பாலும் நாம் அறி​யாத துறை​கள் குறித்து பொதுபுத்​தி​யில் சொல்​லப்​பட்​ட​வற்றையே உண்மை என நம்​புவோம். ஆனால் அங்கு நில​வும் உண்​மைத் தன்மை வேறொன்​றாக இருக்​கும்.

காவல் துறை, அரசு மருத்​து​வ​மனை​யில் இருக்​கும் நல்​லது கெட்​டதுகளை மிக நுட்​ப​மாக நாவல் காட்​சிபடுத்​துகிறது. மானோன்​மணி ஆய்​வாளரைப் போன்​றோர் உண்​மை​யில் காவல்​துறை​யில் இருக்​கலாம், இருப்​பார்​கள்.

ஆனால் பார்த்​தீனியக் காட்டில் முளைத்​திருக்​கும் பயிர்​களைப் போல இருப்பார்கள். எளிய​வர்​கள், மிகுந்த நம்​பிக்​கையோடு அணுகக்​கூடிய இடங்​களாக காவல்​துறை​யும், அரசு மருத்​து​வ​மனை​யும் இப்பொழுதும் இருக்கின்றன. குடும்ப பிரச்​சினை​கள் மனம்​விட்டு பேசி ஆறு​தல்​கொள்​ளும் இடமாக​வும் காவல்​துறை உள்​ளது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in