மனித உறவுகளின் மேன்மையைப் பேசும் கதை

மனித உறவுகளின் மேன்மையைப் பேசும் கதை
Updated on
1 min read

‘மனைவியை விற்றவன்' கதையின் தலைப்புதான் வித்தியாசமாக இருக்கிறதே தவிர, செகாவ் கதைகளில் உள்ள வசீகரம் இக்கதையில் இல்லாமலில்லை. திருமணத்தைத் தாண்டிய உறவுகளில் தடாலடியான முடிவுகளை, யார் எடுத்தாலும் அவர்கள் சந்திக்கும் போராட்டங்களில் வெற்றி எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை அறியும் ஆவலில் நம்மால் புத்தகத்தை கீழே வைக்கமுடியவில்லை.

தானும் ஒரு பாத்திரமாக நுழைந்து வெளியேறும் ஓர் உத்தியை செகாவ் இதில் வெளிப்படுத்தியுள்ளது இன்னும் வித்தியாசமானது. இவரது மற்ற கதைகளைப் போலவே இக்கதையும் மனித உறவுகளின் மேன்மையைத்தான் பேசுகிறது. இக்கதை அவைநாயகன் மொழிபெயர்ப்பில் சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது. - சக்ராவதி

மனைவியை விற்றவன்

ஆன்டன் செகாவ்

தமிழில்:

அவை நாயகன்

மதிமலர் பதிப்பகம்

விலை: ரூ.150

தொடர்புக்கு: 7397319177

மனித உறவுகளின் மேன்மையைப் பேசும் கதை
மறுக்கப்படும் நீதி
Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in