

இந்தியா போன்ற பல்வேறு இன, மொழி பேசும் மக்களடங்கிய ஒரு சமுதாயத்தில் தண்ணீர் முதல் தக்காளி வரை மிக எளிதில் பகையை ஏற்படுத்திவிட முடியும். தங்களுக்குள்ளான பிரச்னைகளை தாங்களாகவே தீர்த்துக்கொள்ளும் வலிமையும் அவர்களிடம் உண்டு. சமீபத்தில்கூட தமிழ்நாடு மற்றும் கர்நாடக விவசாயிகள் பல கட்டமாக சந்தித்துப் பேசினர். அதை ‘காவிரிக் குடும்பம்’ என்றனர்.
ஆனால் அவர்கள் பேசிக்கொள்ள முடியும். ஆனால் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான உண்மையான அதிகாரம் அவர்களுக்குத் தரப்படவில்லை. அவர்களுக்கு உண்மை யான அதிகாரம் தரப்பட்டிருக்குமானால் பற்றாக்குறைக் காலத்தில், இருக்கும் தண்ணீரை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்ற முடிவை அவர்கள் எட்டியிருப்பார்கள்.