இறுதிவரை பின்தொடரும் காதல் | நூல் நயம்

இறுதிவரை பின்தொடரும் காதல் | நூல் நயம்
Updated on
1 min read

வியட்​நாமை பிரான்ஸ் ஆக்​கிரமித்​திருந்த காலத்​தில் அங்கு வாழ்ந்த ஒரு பிரெஞ்​சுக் குடும்​பத்​தைப் பற்​றியது​தான் ‘காதலன்’ என்​கிற இந்​தப் புதினம்.

ஆக்​கிரமிப்​பாள​ருக்கே உரிய அதீத​மான முன்​னெச்​சரிக்​கை, சமூக மேலடுக்​கில் இருக்​கும் பெரு​மிதம், நடுத்​தரக் குடும்​பத்​துக்கு உரிய பொருளா​தா​ரப் பதற்​றம், அது சுய பச்​சா​தாப​மாக உரு​வெடுக்​கும் அவலம் எனப் பல்​வேறு உணர்ச்​சிகள் இந்​தக் குடும்​பத்​தைப் பந்​தாடு​கின்​றன.

துர​திர்​ஷ்ட​வச​மாகக் குடும்ப உறுப்​பினர்​களின் பெரும் பலவீனங்​களும் சேர்ந்​து​கொண்டு வீட்டை ஒரு போட்​டிக்​ களம் போல் ஆக்​கு​கின்​றன.

இந்​தப் போராட்​டத்​தால் அக்​குடும்​பத்​தின் பதின்ம வயதுச் சிறுமி, இயல்​புக்கு மாறான முடிவு​களை எடுக்க நேர்​கிறது. பல ஆண்​டு​களுக்​குப் பிறகு அவள் தனது இளமைக்​காலத்தை நினைத்​துப்பார்ப்​ப​தாகக் கதை கட்​டமைக்​கப்​பட்​டுள்​ளது.

வாழ்க்​கையை ஒரு சுமை​யாகவே அணுகிய அவளது அம்​மா, அம்​மா​வின் அன்​புக்கு ஒரே பாத்​திர​மான சுயநல அண்​ணன், இதனால் இழப்​பாளி ஆக்​கப்​பட்ட அப்​பா​வித் தம்பி ஆகியோர் அவளின் நினை​வு​களில் நடமாடிக்​கொண்டே உள்​ளனர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in