ஆங்கிலத்தில் பாரதி வரலாறு

ஆங்கிலத்தில் பாரதி வரலாறு
Updated on
1 min read

பாரதியை இன்றைக்கு உலகறியும். அதே நேரம், பாரதியாரை முதன் முதலில் மகாகவி என அழைத்தவர் வ.ரா. அவர்தான் பாரதியாரின் முழுமையான வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் அவரே. அந்த நூலுக்கு அவர் இட்ட பெயர் 'மகாகவி பாரதியார்' (சக்தி காரியாலயம் வெளியீடு).

இந்த நூலை 'Subramania Bharati: An Intimate Portrait of a Revolutionary Poet' என்கிற தலைப்பில் இயக்குநரும் எழுத்தாளருமான அம்ஷன் குமார் மொழிபெயர்த்திருந்தார். இந்த நூலை ஹாஷெட் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு அரசின் பாடநூல் கழகம் பதிப்பித்துள்ளது.

மேம்பட்ட வடிவமைப்புடன் இந்த ஆங்கில நூல் வெளியாகி உள்ளது. என்றும் வளமை குன்றாத பாரதி எனும் ஆளுமை குறித்து உலகம் கூடுதலாக அறிந்துகொள்ள இந்த நூல் சிறந்த அறிமுகமாகத் திகழும்.

SUBRAMANIA BHARATI

Va.Ra.

Translated from

Tamil by

AMSHAN KUMAR

hachette india

Price Rs.499

www.hachetteindia.com

ஆங்கிலத்தில் பாரதி வரலாறு
அறிவை விரிவாக்கும் வினாக்கள்
Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in