அறிவை விரிவாக்கும் வினாக்கள்

அறிவை விரிவாக்கும் வினாக்கள்
Updated on
2 min read

தமிழின் பதினெண்​கீழ்க்​கணக்கு நூல்​களுள் ஒன்​றான திருக்​குறள், இரண்​டடிகளை​யும், ஏழு சீர்​களை​யும் உடைய வெண்​பாக்​களால் எழுதப்​பட்ட சிறப்​புக்​குரியது. ஒரு மனிதனின் வாழ்​வியலுக்கு அடிப்​படை​யாக விளங்​கு​கிற அறச் சிந்​தனை​களை​யும், பொருளீட்​டும் வழி​முறை​களை​யும், உடலின்​பத்​திற்​கான ஒழுக்க நெறிகளை​யும் அறம், பொருள், இன்​பம் எனும் முப்​பிரிவு​களாகப் பிரித்து எழுதப்​பட்​டுள்ள நூலாகும்.

‘உலக மனிதகுல மேன்​மைக்​கான அரிய நல்ல பல சிந்​தனை​களைக் கொண்ட நூல்’ என்று உலக மொழி​யியல் அறிஞர்​களாலும் சமூகச் சிந்​த​னா​வா​தி​களாலும் பாராட்​டப்​பெறும் திருக்​குறள், எந்​தக் காலத்​தில் எழுதப்​பட்​டது என்​பதை இன்​ன​மும் அறு​தி​யிட்​டுக்​கூற இயல​வில்​லை.

கி.பி. 10ஆம் நூற்​றாண்டில் மணக்​குட​வர் தொடங்​கி, பரிமேலழகர், வ.உ.சிதம்பரனார் என எண்​ணற்ற தமிழறிஞர்​கள் திருக்​குறளுக்கு உரையெழு​தி​யுள்​ளனர். இன்​ன​மும் எழுதி வரு​கின்​றனர்.

இப்​படி​யான சூழலில் எதை​யும் புது​மை​யாக​வும் புதிய கோணத்​தி​லும் சிந்​தித்து எழுதும் எழுத்​தாளர் இறையன்​பு, ‘திருக்​குறள் 100’ எனும் நூலைப் படைத்​துள்​ளார். முன்பே திருக்​குறளில் இரு​முறை ஆய்​வு​களை மேற்​கொண்​டுள்ள நூலாசிரியர், இந்த நூலில் தன் சிந்​தனையோட்​டத்​தில் 100 வினாக்​களை எழுப்​பி, அதற்​கான விடைகளை​யும் திருக்​குறள் வழிநின்று தேடிக் கண்​டடைந்​துள்​ளார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in