

கடந்த இருபது ஆண்டுகளாக மாற்றுத்திறனாளர்கள் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என்று பல வடிவங்களில் தங்களுடைய உணர்வுகளையும் உரிமைகளையும் அனுபவங்களையும் எழுதிவருகின்றனர்.
மனுஷ்ய புத்திரனின் ‘என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்’ கவிதைத் தொகுப்பில் ‘கால்களின் ஆல்பம்’ என்னும் கவிதை அசையும் கால்கள், நடனமாடும் கால்கள், படியிரங்கும் கால்கள், அதிகார கால்கள் என்று பலவகையான கால்களை விவரித்து தமிழ்ச் சூழலில் அதிர்வலையை உருவாக்கியது.
எம்.வி.வெங்கட்ராமின் ‘காதுகள்’, மகாலிங்கம் கதாபாத்திரத்தின் மூலம் பல குரல்கள் காதுக்குள் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருப்பதை எடுத்துரைக்கிறது. இந்த நாவலுக்காக அவருக்கு சாகித்திய அகாதமி விருதும் கிடைத்தது.
ஏ.வெங்கடேசனின் ‘கடவுளும் குழந்தையும்’ சிறுகதைத் தொகுப்பும் மிக முக்கியமானது. பார்வையற்றோருக்கும் காதல், காமம், பாலியல் வேட்கை ஆகியவை உண்டு என்பதனைத் தனித்துவமாக எடுத்துரைக்கிறது.