Published : 14 Feb 2016 02:11 PM
Last Updated : 14 Feb 2016 02:11 PM

விடு பூக்கள்: ஹாரிபாட்டர் அடுத்த பாகம் தயார்

ஹாரிபாட்டர் அடுத்த பாகம் தயார்

ஹாரிபாட்டர் நாவல் வரிசையைத் தொடர்ந்து படித்த வாசகர்களுக்கு அடுத்த விருந்தைத் தயார் செய்துவிட்டார் அதன் ஆசிரியர் ஜே.கே.ரவுலிங். ஹாரிபாட்டரின் ஏழாம் பாகம், ‘ஹாரிபாட்டர் அண்ட் த டெத்லி ஹாலோஸ்’, 2007-ல் வெளிவந்தது. ஹாரிபாட்டரின் அடுத்த பாகத்தை வாசகர்கள் ஆவலாக எதிர்பார்த்துவந்த நிலையில் அதன் எட்டாம் பாகமான நாடகம் வரும் ஜூலை 31 அன்று வெளியாக இருக்கிறது. ‘ஹாரி பாட்டர் அண்ட் த கர்ஸ்டு சைல்ட்’ (Harry Potter and the Cursed Child) என்னும் தலைப்பில் வெளியாகும் அது இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும். ஏழாம் பாகம் முடிந்த இடத்தில் இந்தப் பாகத்தின் கதை தொடங்கும். ஜே.கே.ரவுலிங், ஜேக் தோர்ன், ஜான் டிஃபானி ஆகியோர் எழுதிய கதையின் அடிப்படையில் இந்நாடகத்தை ரவுலிங் படைத்துள்ளார். இங்கிலாந்தின் லிட்டில் பிரவுன் பதிப்பகம் இந்நாவலை வெளியிடுகிறது. இதன் மின்னூலை பாட்டர்மோர் நிறுவனம் வெளியிடுகிறது.

அண்ணனுக்காகத் தங்கை எழுதிய கிராபிக் நாவல்

னச்சிதைவு நோயாளியாக இருந்து தற்கொலை செய்துகொண்ட அண்ணன் குறித்து இங்கிலாந்தைச் சேர்ந்த கிராபிக் நாவல் எழுத்தாளர் ரவி தார்ன்டன், ஹோக்ஸ் சைக்கோசிஸ் ப்ளூஸ என்ற கிராபிக் நாவலை எழுதியுள்ளார். அண்ணன் மனச்சிதைவில் இருந்தபோது எழுதிய கவிதைகளைக் கொண்டு ஹோக்ஸ் மை லோன்லி ஹார்ட் என்ற இசை நாடகத்தையும் அரங்கேற்றவுள்ளார். மனச்சிதைவு நோய் பாதித்த அண்ணனுடன் நெருக்கமாக இருந்த ரவி தார்ன்டன், சகோதரன் அனுபவித்த மனநிலைகள், சிந்தனைகள் மற்றும் கற்பனாதீதங்களைக் கொண்டு இந்த நாவலைப் படைத்துள்ளார். “ மனச்சிதைவு நோயால் அவதிப்படுபவர்களால் பரஸ்பரம் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாது. அவர்களால் பேச இயலாமல் இருக்கலாம். கடுமையான கொந்தளிப்பில் இருக்கலாம்” என்கிறார் அவர்.

கமலா தாஸாக வித்யாபாலன்

மலையாள எழுத்தாளர் கமலா தாஸின் வாழ்க்கை சரிதத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் இருமொழித் திரைப்படத்தில் வித்யாபாலன் கமலா தாஸாகத் தோன்றவுள்ளார். பெண்களின் காமத்தை சுதந்திரமாக எழுதிய கமலா தாஸின் ஆளுமையைப் பிரதிபலிக்க வித்யாபாலன் மட்டுமே பொருத்தமானவர் என்று அப்படத்தின் இயக்குநர் கமல் கூறியுள்ளார்.

‘இஸ்கியா' மற்றும் ‘டர்ட்டி பிக்சர்' மூலம் அதை நிரூபித்துள்ளார் என்று கமல் கூறியுள்ளார். கமலா தாஸின் கதை, மூன்று பாகங்களாக எடுக்கப்படவுள்ளது. 15 வயதுப் பெண்ணாக வங்கி அதிகாரியுடன் ஏற்படும் திருமண பந்தம் பற்றியது முதல் பாகம். இரண்டாவது பாகம் கமலா தாஸ் எழுதிய எண்டே கதா சுயசரிதையை ஒட்டியது. மூன்றாம் பாகம், 67 வயதில் இஸ்லாமைத் தழுவி கமலா சுரயா ஆன பின்னர் நடப்பது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x